Home /News /tamil-nadu /

உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.. ஏன் தெரியுமா? - எடப்பாடி பழனிசாமி

உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.. ஏன் தெரியுமா? - எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி,

ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி,

Edappadi Palaniswami : திமுக சவாலை ஏற்க தயார் என்றும், மக்கள் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க நானும் ஓபிஎஸ்-ம் தயார் எனவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மதுரை மாநாகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக  வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்மைச்சருமான எடப்பாடி பழனிசாமி,  மதுரை புதூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், உள்ளாட்சி அமைப்பு என்பது மக்களுக்கு சேவை செய்ய கூடிய அமைப்பு. அதிமுக கவுன்சிலர்கள் அதிகமானோர் வெற்றி பெற்று அதிமுக சார்பில் மேயராக வேண்டும்.

அதிமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்று வரும் போது,  குடிநீர்,  சாலை சீரமைப்பு, கழிவு நீர் அகற்றம் போன்ற பணிகள் தொய்வில்லாமல் நடைபெறும் என்று கூறினார். மதுரை என்றாலே அதிமுக கோட்டை. அதை உறுதிபடுத்த வேண்டும். மதுரை மாவட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். திமுகவின் 9 மாத கால ஆட்சி யில்  கொள்ள அடிப்பது நடந்துள்ளது என்றார்.

நீட்  தேர்வு குறித்து திமுக வுடன் விவாதிக்க நாங்கள் தயார். திமுக சவாலை ஏற்க தயார். மக்கள் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் விவாதிக்க தயார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேருக்கு நேர் நானும், ஓபிஎஸ்-ம் விவாதிக்க தயார். சவாலுக்கு சவால், யாருடைய ஆட்சி காலத்தில் நீட் தேர்வுக்கான நச்சு விதை ஊன்றப்பட்டது? என்றும் விவாதிக்க தயார். திமுக தலைவர்கள் சொல்வதெல்லாம் பச்சை பொய் உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். எதற்காக என்றால், நீட் தேர்வு ரத்து செய்ய திமுகவின் உதயநிதி,  ஒரு ரகசியம் கூறினார்.  ஆனால் அந்த ரகசியம் யாருக்கும் தெரியல. எனவே உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆட்சி பொறுப்பேற்று 9 மாத கால ஆட்சியில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் கூறுனார். அவரது மகன் உதயநிதி ஸ்டா லின் 9 மாத கால ஆட்சியில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவெற்றி உள்ளோம் என போட்டி போட்டு பொய் சொல்கின்றனர். இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என மு.க. ஸ்டாலின் கூறுகிறார்.  ஆம் பொய் பேசுவதில் இந்தியாவில் சிறந்த முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். பொய் பேசி ஆட்சிக்கு வந்த கட்சி  நீண்ட நாட்களுக்கு நிலைக்காது.

Read More : இதுதான் நீட் ரகசியம்.. கடலூர் பிரச்சாரத்தில் போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்

இந்தியாவிலேயே ஊழல் செய்ததால் கலைக்கப்பட்ட அரசாங்கம் திமுக ஆட்சி தான். ஊழல் என்ற வார்த்தை தமிழகத்தில் பிறந்தது திமுகாவால்தான். முதன் முதலில் கொரோனா வந்த காலத்தில் மக்களை காப்பாற்றிய அரசு அதிமுக அரசு.  9 ஆண்டு காலம் கொரோனா காலத்தில் இலவச பொருட்கள் கொடுத்த அரசு. பொங்கல் பரிசாக மக்களுக்கு 1000 ரூபாய் கொடுத்தது அதிமுக அரசு. கடந்த பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுத்தோம்.  மக்கள் சிறப்பாக கொண்டாடினர். ஆனால் தற்போது திமுக அரசு பொங்கலுக்கு 100 ரூபாய் கூட கொடுக்க வில்லை. கொடுத்து பழக்கப்பட்ட கட்சி திமுக அல்ல. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கலுக்கு கொடுத்த பொருள் தரமானதாக இல்லை.  21 பொருட்கள் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் 15 பொருட்கள்தான் கொடுத்தனர். வெல்லம் கொடுத்தார்கள். அதன் தரம் குறித்து மக்களுக்கே தெரியும்.

Must Read : தி.மு.க நீட் தேர்வை வைத்து அரசியல் தான் செய்கிறது - பிரேமலதா விஜயகாந்த்

திமுக தேர்தல் வாக்குறுதியில் இல்லதரசிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பதாக கூறினார்கள். கொடுக்கவில்லை. கியாஸ் சிலிண்டர்களுக்கு மானியம் கொடுப்பதாக கூறினார்கள். கொடுக்கவில்லை. பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தனர். ஆனால் மாநில அரசு தேர்தலில் கூறியபடி குறைக்க வில்லை. நகைகடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி, வங்கிகளில் விவசாய நகை கடன் பெற்ற. 35 லட்சம் பேர் இன்று வங்கிகளில் வட்டி கட்டி கொண்டிருக்கின்றனர். அவர்கள் எந்த காலத்திலும் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Published by:Suresh V
First published:

Tags: Edappadi Palaniswami, Local Body Election 2022, Neet Exam

அடுத்த செய்தி