Home /News /tamil-nadu /

வங்கி கொள்ளை- தமிழக அரசு இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

வங்கி கொள்ளை- தமிழக அரசு இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

'திமுக அரசின் காவல் துறையில் இதயம், கல்லீரல் முதல் அனைத்து பாகங்களும் செயலற்று கிடக்கிறது' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழக முதலமைச்சர் இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்று விளம்பரங்கள் மூலம் தன்னைத் தானே மார்தட்டிக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    சென்னையில் நடந்த வங்கி கொள்ளை குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இனியாவது அரசு விழித்துக்கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர் காவல் துறையினரை சுதந்திரமாக, சட்டப்படி செயல்பட அனுமதித்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் அரும்பாக்கம் சாலையில் பட்டப்பகலில் தனியார் வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் அதிர்ச்சியளிக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

    ALSO READ |  "மதுரை மக்கள் தங்களை யாராவது சீண்டினால் பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்" - அண்ணாமலை

    மேலும் திமுக அரசின் காவல் துறையில் இதயம், கல்லீரல் முதல் அனைத்து பாகங்களும் செயலற்று கிடப்பதாக விமர்சித்துள்ளார். தமிழக முதலமைச்சர் இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்று விளம்பரங்கள் மூலம் தன்னைத் தானே மார்தட்டிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான சூத்திரதாரிகளையும், உண்மையான கொள்ளையர்களையும் காவல் துறை கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை அற்று போய்விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Cm edappadi palanisamy, MK Stalin

    அடுத்த செய்தி