Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

லஞ்சத்தில் தான் முதலிடம்.. வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

லஞ்சத்தில் தான் முதலிடம்.. வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Dharmapuri : அனைத்திலும் முதல் இடம் என்று சொல்லிக் கொள்ளும் தமிழக அரசு லஞ்சத்தில் மட்டும் தான் முதலிடத்தில் உள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகம் அனைத்திலும் முதல் இடம் என்று சொல்லிக் கொள்ளும் தமிழக அரசு, லஞ்சத்தில் மட்டும் தான் முதலிடத்தில் உள்ளது என்றும், கல்வி கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த விழாவில் குற்றம் சாட்டிப் பேசினார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதியில் நடைபெற்ற அதிமுக கொடி யேற்றும் விழா,  நிகழ்ச்சியில் பங்கேற்க காலை வருகை புரிந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,  தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி  மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர், தர்மபுரி மாவட்ட, பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் தலைமையில், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் எச்.புதுப்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அங்கு நிறுவப்பட்டுள்ள 33 அடி கொடி கம்பத்தில் அதிமுக, கொடி ஏற்றி வைத்து, எம்.ஜி.ஆர் சிலைக்கு  எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், திமுக தற்போது ஏதோ சந்தடி சாக்கில் ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எந்த விதமான புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் தற்போது மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். நான் போட்ட திட்டங்களுக்கு தான் அடிக்கல் நாட்டு கொண்டிருக்கிறார். அனைவரும் கூறுவது போல் ஸ்டிக்கர் ஓட்டுகின்ற வேலையைத்தான் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.

அதிமுக ஆட்சியில் கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் நகரங்களுக்கு இணையான திட்டங்களை கிராமங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தியது. தரமான சாலைகள் அமைக்க திட்டம் வேளாண் பெருமக்கள் பயன்படும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இத்திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

குடி மராமத்து பணிகள், தடுப்பணைகள் கட்டும் பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் தற்போது வரை நிறைவேற்றவில்லை. இல்லம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு மாதத்திற்கு 1000 ரூபாய் வழங்கவும் என்று பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்வி கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என்று அறிவித்து அதற்கு பல்வேறு புதிய விதிமுறைகளை வகுத்து 48 லட்சம் பேர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதியை நம்பி ஐந்து சவரன் நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து, அந்தப் பணத்தை செலவு செய்துவிட்டு தற்போது நடுத்தெருவில் நிற்கிறார்கள். தற்போது 13 லட்சம் பேருக்குதான் நகை கடன் தள்ளுபடி என்று கூறுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிமுக எப்போதுமே பொதுமக்களுக்கு துணை நிற்கும். அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் புதிய அரசு கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். அனைத்திலும் முதல் இடம் என்று சொல்லிக் கொள்ளும் தமிழக அரசு லஞ்சத்தில் மட்டும் தான் முதலிடத்தில் உள்ளது.

Must Read : அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடரும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் ஒரு குடும்பம் மட்டும் தான் பிழைத்த கொண்டிருக்கிறது அது திமுக குடும்பம் மட்டுதான் மற்ற குடும்பம் எல்லாம் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்று பேசினார்.

செய்தியாளர் - ஆர்.சுகுமாா், தருமபுரி.

First published:

Tags: ADMK, Dharmapuri, Edappadi Palaniswami