Black fungus : தனி கவனம் செலுத்தி, கருப்பு பூஞ்சை நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், அரசாங்கம் தனி கவனம் செலுத்தி, கருப்பு பூஞ்சை நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

  • Share this:
    சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் பேசுகையில், “சேலம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் மூச்சுத்திணறல் காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர். சேலம், ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்டன. ஐசியு சேர்த்து ஆக்ஸிஜன் 1153 படுக்கைகள் நிரம்பிவிட்டன. எனனே, எவரேனும் டிஸ்சாரஜ் ஆனால்தான் புதிதாக தொற்று ஏற்படுவோருக்கு படுக்கை கிடைக்கிறது” என்று கூறினார்.

    மேலும், “உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே இருந்த படுக்கைகள் மட்டுமே தற்போது வரை உள்ளன. எந்தெந்த மருத்துவமனைகளில் படுக்ககள் காலியாக உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். சேலம் மாவட்டம் முழுக்க கோவிட் சிகிச்சைக்கு 3,800 படுக்கைள் உள்ள நிலையில், 11,700 என தவறான எண்ணிக்கையை கொடுக்கிறார்கள்.

    தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 267 பரிசோதனை மையங்கள் மட்டுமே தற்போது வரை உள்ளன. பரிசோதனை மையங்களை அதிகரித்து ஆர்.டி.பி.சி.ஆர். (RTPCR) பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.” என்றார்.

    தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “இறப்பை குறைத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இறப்பு விவரங்களை வெளிப்படைத் தன்மையோடு வெளியிட வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    ஆம்புலன்ஸில் காத்திருந்து உயிரிழப்பவர்களை முறையாக உரிய கவர்களைக் கொண்டு மூடப்பட்ட பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சடலங்கள் பல நேரம் காத்திருந்து அடக்கம் செய்ய வேண்டி உள்ள நிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊரடங்கு அறிவித்த பின்னர், மீண்டும் ஒரு ஊரடங்கு அறிவித்து அதற்கு முன்னர் தளர்வு கொடுத்ததால் 6 லட்சம் பேர் நகர் புறத்திலிருந்து கிராம்ப்புறத்திற்கு வந்துள்ளனர். இவர்களை முறையாக கண்காணிக்கவில்லை.

    கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் பற்றி முழுமையாக தெரியாத போதும், தடுப்பூசி வராத போதும், கொரோனாவை எங்கள் ஆட்சியில் கட்டுபடுத்தி வைத்திருந்தோம். தற்போது, மருந்து, தடுப்பூசி இருந்தும், இந்த ஆட்சியில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முடியவில்லை.

    அதேபோல், கருப்பு பூஞ்சை நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் தனி கவனம் செலுத்தி, கருப்பு பூஞ்சை நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்.” என்று கூறினார்.

    Must Read : ஒரே கூட்டத்தில் ஐ.பெரியசாமி, ஓ.பன்னீர்செல்வம்: 2 மணிநேரம் அருகருகே உட்கார்ந்து கொரோனா தடுப்புபணி குறித்து ஆலோசனை

    அத்துடன், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த எடப்பாடி தினத்தந்தி செய்தியாளர் நல்லதம்பி குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய், அதிமுக சார்பாக வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அப்போது அறிவித்தார்.
    Published by:Suresh V
    First published: