முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்திலேயே மருத்துவப் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்திலேயே மருத்துவப் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Russia Ukraine War : போர் காரணமாக உக்ரைனில் மருத்துவ படிப்பை தொடர முடியாததால், தமிழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், அந்த மாணவர்கள் தமிழகத்திலேயே மருத்துவப் படிப்பினை தொடர்ந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Russia Ukraine War : போர் காரணமாக உக்ரைனில் மருத்துவ படிப்பை தொடர முடியாததால், தமிழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், அந்த மாணவர்கள் தமிழகத்திலேயே மருத்துவப் படிப்பினை தொடர்ந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Russia Ukraine War : போர் காரணமாக உக்ரைனில் மருத்துவ படிப்பை தொடர முடியாததால், தமிழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், அந்த மாணவர்கள் தமிழகத்திலேயே மருத்துவப் படிப்பினை தொடர்ந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 14ஆவது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு 'ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் மீட்டு வருகிறது. அதன்படி, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், உக்ரைனிலிருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுமி பகுதியிலிருந்து 694 இந்திய மாணவர்களும் வெளியேறி விட்டதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியது முதலே அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.

இதனிடையே, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு சபையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி திருமூர்த்தி, ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார். எனினும், சுமி பகுதியிலிருந்து நமது மாணவர்களை பத்திரமாக வெளியேற்றுவதற்கு வழி ஏற்படுத்தப்படவில்லை என்றும் திருமூர்த்தி வேதனை தெரிவித்தார்.

இதற்கிடையில், டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணி முதல் போர் நிறுத்தத்தை அறிவிப்பதாகவும், மாணவர்கள் வெளியேறுவதற்கான வழியை ஏற்படுத்தத் தயார் என்றும் தெரிவித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மனிதாபிமான முறையில் வெளியேறுவதற்கான வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டது. அடுத்த முறை இந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பது உறுதியாக இல்லாததால், ரயில் அல்லது கிடைக்கும் மற்ற வாகனங்களைப் பயன்படுத்தி வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்தியா, வங்கேதசம், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் 12 பேருந்துகள் சுமியிலிருந்து போல்டோவா பிராந்தியம் நோக்கி புறப்பட்டன. இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தினர் பாதுகாப்பாக வந்தனர். சுமி பகுதியில் இருந்த இந்தியர்கள் 694 பேரும், போல்டாவா-வுக்கு பேருந்தில் புறப்பட்டனர் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார்.

Must Read : உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர் முதல்வர் ஸ்டாலினுக்கு உருக்கமான கோரிக்கை : தூதரகம் போதிய கவனம் செலுத்தவில்லை என கவலை

இதற்கிடையில், சுசீவா பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை மட்டும் இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் 410 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம், இதுவரை உக்ரைனிலிருந்து 17 ஆயிரத்து 988 பேர் இந்தியாவுக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உக்ரைனில் இருந்து தமிழ்நாட்டுக்கு இதுவரை ஆயிரத்து 90 மாணவர்கள் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, வங்கதேசத்தை சேர்ந்த மாணவர்களையும், பாகிஸ்தானை சேர்ந்த ஆஷ்மா சபீக் எனும் மாணவியையும் இந்திய அரசு மீட்டு வந்துள்ளது.

Read More : உக்ரைனில் படிக்க மாணவர்கள் பெற்ற வங்கி கடனை தள்ளுபடி செய்யவேண்டும் - சீமான் கோரிக்கை

இந்நிலையில், நாடு திரும்பிய மாணவர்களை தாய் நாட்டிலேயே படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் படிப்பிற்காக வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ''ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மருத்துவ படிப்பிற்காக சென்ற மாணவ மாணவியர் தங்களுடைய மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் தமிழகத்திற்கே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

top videos

    தற்போது போர் முடிவதற்கான அறிகுறியே தென்படவில்லை. எனவே உக்ரைனில் மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலையில் நமது தமிழக மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர். அவர்களது இச்சூழ்நிலையை கருத்திற் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்வியாளர்களை கலந்து பேசி, நமது மாணவச்செல்வங்கள் தமிழகத்திலேயே மருத்துவப் படிப்பினை தொடர்ந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறே'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Edappadi Palaniswami, Russia - Ukraine, Tamil student