ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறாரா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

எடப்பாடி பழனிசாமி

அதிமுக புதிய அவைத்தலைவர் குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.

 • Share this:
  அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறார் என்பது தவறான செய்தி என்றும், அவர் தனது சொந்த வேலை காரணமாகவே டெல்லிக்குச் சென்றுள்ளார் எனவும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

  இது குறித்து எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு என்பது தவறான தகவல். 2011 அதிமுக ஆட்சி பொறுப்பேற்கும் போது கடன்சுமை இருந்தது. மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட பல சாதனங்கள் விலை உயர்ந்தன. ஆனால் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. போக்குவரத்து துறையிலும் இதே சூழல் நிலவுகிறது.

  இதுவரை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மட்டுமே, திமுக ஆட்சியில் தொடங்குகிறார்கள். நூறுநாட்களில் மக்கள் பிரச்னைகளை தீர்ப்போம் என்று திமுக கூறியதைதான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். திமுக அறிவித்த எந்த திட்டங்களையும் திமுக நிறைவேற்றவில்லை.

  Must Read : ராஜேந்திர பாலாஜி பா.ஜ.கவில் இணைகிறாரா? - அண்ணாமலை விளக்கம்

  ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறார் என்பது தவறான செய்தி. அவர் சொந்த வேலை காரணமாக டெல்லி சென்றுள்ளார். அதிமுக புதிய அவைத்தலைவர் குறித்து கட்சித்தலைமை முடிவு செய்யும். மாற்றுக்கட்சியிலிருந்து ஒருவர் இணையும் போது வரவேற்கிறோம் என்பது இயல்பு” என்று கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பெகாசஸ் விவகாரம் உண்மை நிலை குறித்து தெரியாமல் கருத்து சொல்ல முடியாது என்றும் கூறினார்.
  Published by:Suresh V
  First published: