ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஓபிஎஸ் துரோகி.. யாருக்கும் அவர் நன்மை செய்ததில்லை - இபிஎஸ் சாடல்

ஓபிஎஸ் துரோகி.. யாருக்கும் அவர் நன்மை செய்ததில்லை - இபிஎஸ் சாடல்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ADMK : முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு துரோகி என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள இபிஎஸ் சாடியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதலில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக அலுவலகத்திற்கு அத்து மீறிச் சென்ற ஓபிஎஸ், அங்கிருந்து ஏராளமான ஆவணங்களை எடுத்துச் சென்றதாக குற்றம்சாட்டினார்.

ஓபிஎஸ் ஒரு துரோகி என்றும் மக்கள் உட்பட யாருக்கும் அவர் நன்மை செய்ததில்லை என்றும் கூறினார். மீன்பாடி வண்டியில் கற்களை எடுத்து வந்து அதிமுக தொண்டர்களை தாக்கியதாக ஈபிஎஸ் குற்றம்சாட்டினார். தாக்குதல் குறித்து புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இபிஎஸ் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிமுக பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் வருவார் எனக் கருதி அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக அப்போது இபிஎஸ் குறிப்பிட்டார். மேலும், சீல் வைக்கப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை திறக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்தார்.

Must Read : ஒபிஎஸ்-இபிஎஸ் அணியில் இல்லாத அதிமுகவினரை அழைத்து சென்னையில் கூட்டம் நடத்தப்போவதாக கே.சி. பழனிசாமி அறிவிப்பு

இதனிடையே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, EPS, OPS