சசிகலா சிறையிலிருந்து வந்தால் அ.தி.மு.கவில் எந்த மாற்றமும் நிகழாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

சசிகலா சிறையிலிருந்து வந்தால் அ.தி.மு.கவில் எந்த மாற்றமும் நிகழாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

முதலமைச்சர் பழனிசாமி

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்தால் அது அதிமுகவில் எந்த மாற்றத்தையும் எற்படுத்தாது என கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

 • Share this:
  கோவையில் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘நீட் தேர்வில் இருந்து யாருக்கும் விலக்கு கொடுக்கப்படவில்லை. நீட் தேர்வு கூடாது என்பதுதான் அதிமுக நிலைப்பாடு. நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.
  இன்று 313 பேர் இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்திருக்கின்றனர்.

  தமிழகத்தில் 8,41,251 பேர் 12 ம் வகுப்பு எழுதிய மாணவர்களில் 41 சதவீதம் பேர் 3,44,485 மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்கள். 41 சதவீதம் படிக்கும் மாணவர்களில் 6 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்தது. நான் கிராமத்தில் படித்து வந்தவன் என்பதால், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என அறிந்து உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. அதன்பின்னரே இன்று 313 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  புதிய கல்வி கொள்கை குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியில் வருவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

  இன்று மருத்து படிப்பில் சேர்ந்த மாணவர்கள் உடனடியாக நாளையே சேரவேண்டும் என்று சொல்லி இருப்பது குறித்து விசாரித்துசொல்கின்றேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் கிளம்பி வந்து விட்டதால் தெரியவில்லை. அரசை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழை பாதிப்பை சரி செய்யவும், பருவமழையால் மக்கள் பாதிக்காமல் இருக்கவும் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் லாட்டரி தடை குறித்து சட்டம் இயற்றி இருக்கின்றோம். அதை மத்திய அரசுதான் நடைமுறைபடுத்துவார்கள். அவர்களிடம் முழு அதிகாரம் இருக்கின்றது. சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்தியாவிலேயே நீட்டை எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம். நீட்டை கொண்டு வந்த காங்கிரஸ் ஆட்சியில், திமுக அப்போது அங்கம் வகித்தது. அதை செய்தியாளர்கள் யாரும் கேட்காமல் எப்போது பார்த்தாலும் நீட்டு, நீட்டு, நீட்டுன்று என கேட்குறீங்க என ஆவேசமடைந்தார்.

  அப்போது 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்துள்ளதற்கு பெருமை பேசுகின்றீர்கள். ஆனால் மத்திய அரசின் மருத்துவகல்லூரிகளில்
  நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதே என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம் அடைந்தார்.

  7.5 சதவீதம் என்னவென்று தெரியுமா ? தேவையில்லாமல் பேசாதீர்கள்? என கூறிய முதல்வர் நான் கிராமத்தில் இருந்து வந்தவன். 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது உண்மையில் பெருமை கொள்கின்றேன். நான் கிராமத்தில் இருந்து வந்தவன், என்ன கேள்வி கேட்குறீங்க என எடப்பாடி பழனிச்சாமி ஆவேசத்துடன் அவசர அவசரமாக பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பினார்.
  Published by:Karthick S
  First published: