Home /News /tamil-nadu /

NEETக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் - எடப்பாடி பழனிசாமி

NEETக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

NEET Exemption Bill : சட்ட வல்லுநர்கள் மூலம் நீட் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும். ஏனென்றால் இது உணர்வு பூர்வமான மாணவர்கள் சம்மந்தபட்ட பிரசனை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான NEET - ல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரும் மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. இருப்பினும் வெளியில் திமுக கூட்டணி கட்சியினர் நீட் தேர்வுக்கு அதிமுகதான் காரணம் என அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றார்.

    சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கரை முழுமையாக பேச அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படியே நீட் தேர்வை நடத்த வேண்டிய சூழலில் அன்றைய அதிமுக அரசு இருந்தது இன்றும் நீட் தேர்வும் நடைபெறுகிறது.

    திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதுதான் நீட் தேர்வு எனும் வார்த்தையே அறிமுகமானது. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்றார்.

    அத்துடன், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செல்லும் போது சட்டவல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு சட்ட ரீதியாக இந்த பிரச்சனையை அணுக வேண்டும். சட்ட வல்லுநர்கள் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும். ஏனென்றால் இது உணர்வு பூர்வமான மாணவர்கள் சம்மந்தபட்ட பிரசனை என்றும் கூறினார்.

    இந்நிலையில், சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நீட் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அதிமுக நிலைப்பாடு. எங்கள் மீது அவதூறு பிரச்சாரம் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது எனது ஆட்சி காலத்தில் தான் நீட் கொண்டுவரபட்டது என பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது. நீட் யார் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது இது எல்லோருக்கும் தெரியும் என்றார்.

    Read More : நீட் தேர்வு அல்ல அது.. பலி பீடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்

    முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் பேசும்போது, 10.7.19 அன்று குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. சட்டத்துறை மூலமாக, ஜனாதிபதிக்கு நிராகரிக்கப்பட்டதற்கான காராணங்கள் கேட்கப்பட்டது என்பதை முதல்வருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    Must Read : நீட் விலக்கு மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்... இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

    சட்ட நுணுக்கத்தோடு அணுக வேண்டிய விஷயம் இது சட்ட வல்லுநர்களை கொண்டு இந்த விவகாரத்தை மிக நுணுக்கமாக அணுக வேண்டும். இதை அரசியல் ஆக்க வேண்டாம். திராவிட கட்சிகள் நீட் எதிர்ப்பு விவகாரத்தில் ஒத்த கருத்துடன் உள்ளன என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Edappadi Palaniswami, Neet Exam, TN Assembly

    அடுத்த செய்தி