சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் பெரிய இழப்பைச் சந்திப்பார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய இழப்பைச் பெறுவார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல, அ.தி.மு.க சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி கந்தனேரி பகுதியில் மகளிரிடம் கலந்துரையாடல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார்.

  அப்போது அவர், ‘தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே அவதூறு பேசிவருகிறார். அவர் மிகவும் கீழ்த்ரமான வார்த்தைகளை பயன்படுத்திவருகிறார். விவசாயி முதலமைச்சராக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நாட்டு மக்களுக்கு உழைக்க வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தித் தந்திருக்கின்றான்.

  சட்டமன்ற பொதுத்தேர்தலில் மிகப்பெரிய இழப்பை மு.க.ஸ்டாலின் பெறுவார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பெணகளை நிம்மதியாக வாழவிடமாட்டார்கள். விவசாயிகளுக்கு என்னென்ன வேண்டுமோ அனைத்தும் செய்து தரப்படும். தேசிய அளவில் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது’ என்று தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: