EDAPPADI PALANISWAMI SAID HRAJA IS TALENTED PERSON SKD
ஹெச்.ராஜா திறமையானவர் - கையில் தாமரை சின்னத்துடன் வாக்கு சேகரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி
பிரச்சாரத்தில் ஹெச்.ராஜா, எடப்பாடி பழனிசாமி
பா.ஜ.க மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா; காரைக்குடி தொகுதிக்கு அனைத்து திட்டங்களும் வந்து சேரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனைமுன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்துவருகின்றனர். நேற்று, காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாக காரைக்குடியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. அப்போது திறந்தவேனில் நின்றபடி பேசிய அவர், ‘பா.ஜ.க மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா திறமையானவர். தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். தி.மு.க சந்தர்ப்பவாத கூட்டணி. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பாட்டால்தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.
காங்கிரஸின் அடிமை தி.மு.க. கூட்டணி மாறலாம். நன்றி மறக்க கூடாது. மத்தியிலும், மாநிலத்திலும் வாரிசு அரசியல் கூடாது. 12 கூட்டங்களில் பேசியுள்ளேன். தொண்டை சரியில்லை. தி.மு.க ஒரு கம்பெனி. தி.மு.கவில் பணம் செலுத்தி பங்கு சேர்ந்து கிடலாம். அப்பதான் சீட் கிடைக்கும். கண்ணப்பன் ஒரு பச்சோந்தி. பல கட்சிக்கு போகிறவர். தி.மு.க தேய்கிறது.
தி.மு.கவில் 20 பேர் வாரிசு வேட்பாளர்கள். தாமரை சின்னத்தை காண்பித்து வாக்கு சேகரிக்கிறார். காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு அனைத்து திட்டங்களும் வந்து சேரும். கட்டணமில்லா கேபிள் இணைப்பு, ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். அ.தி.மு.க மக்களுக்கான கட்சி’ என்று தெரிவித்தார்.