Home /News /tamil-nadu /

தேசிய அரசியலில் பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுவோம் - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தேசிய அரசியலில் பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுவோம் - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தேசிய அரசியலில் பா.ஜ.கவுடன் இணைந்து அ.தி.மு.க செயல்படும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘அ.தி.மு.கவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சிகளும் பெரும்பாலான இடங்களில் போட்டியிட விரும்புவார்கள். ஆகையால்தான் பா.ஜ.கவுடன் உடன்பாடு ஏற்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே அ.தி.மு.க-பா.ஜ.க தனித்தனியே போட்டியிடுகிறது.

    தேசிய அரசியலில் பா.ஜ.கவுடன் அ.தி.மு.க இணைந்து செயல்படும். அப்போதுதான் தமிழகம் வளர்ச்சி பெறும். தி.மு.கவின் 8 மாத ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்களே அதிகம். கொரோனோ பரவலை தடுக்க தி.மு.க அரசு போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.கவின் 8 மாத கால ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களே தினசரி நிகழ்கிறது. சட்ட ஒழுங்கு பிரச்சனை அடியோடு சீர்கெட்டு விட்டது. அ.தி.மு.க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதியப்பட்டு வருகிறது. தி.மு.க அரசு சர்வாதிகார அரசாக செயல்படுகிறது.

    தி.மு.க, ம.தி.மு.க இடையே பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளது - துரை வைகோ விளக்கம்



    நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கு அவரே மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த பிரச்சினை முடிந்துவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்ட பிறகு 17 நாட்கள் கழித்து பொங்கல் தொகுப்பு வினியோகத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மாணவி தற்கொலை விவகாரத்தில் ஆடியோ, வீடியோ வெளியிட்டவர்களிடம்தான் கேட்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK, BJP, Edappadi Palaniswami

    அடுத்த செய்தி