நதிகள் இணைப்பு: மெட்ரோ திட்டத்துக்கு நிதி - அமித்ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய கோரிக்கைகள்

மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு மத்திய அரசு 50 சதவீத நிதி பங்களிப்பை வழங்கவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கைவிடுத்துள்ளார்.

நதிகள் இணைப்பு: மெட்ரோ திட்டத்துக்கு நிதி - அமித்ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய கோரிக்கைகள்
அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி
  • News18 Tamil
  • Last Updated: November 21, 2020, 10:14 PM IST
  • Share this:
தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அமித்ஷா இன்று காலை 10.50 மணிக்கு டெல்லியிலிருந்து தனிவிமானத்தில் சென்னை புறப்பட்டார்.ர் மதியம் 2 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார். தமிழகம் வந்த அமித்ஷாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று வரவேற்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, மாஃபா பாண்டியராஜன், தங்கமணி, சிவி சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

அதனையடுத்து, சென்னை சேப்பாக்கத்திலுள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் அமித்ஷாவும் கலந்துகொண்டார். அப்போது, சில கோரிக்கைகள் அடங்கிய மூன்று கடிதத்தை அமித்ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

அந்த கடிதத்தில், ‘நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கவேண்டும். கோதாவரி-காவிரி இணைப்பு, காவிரி - குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் தரவேண்டும். நடந்தாய் வாழி, காவிரி திட்டத்துக்கான நிதியை விரைந்து விடுவிக்கவேண்டும். தருமபுரி, விருதுநகரில் மெகா டெக்ஸ்டைல் தொழிற்பூங்கா அமைக்கவேண்டும்.


சென்னை அருகே மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு பூங்கா அமைக்க நிதி, தொழில்நுட்ப வசதிகளை மத்திய அரசு வழங்கவேண்டும். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டும். மெட்ரோ 2-ம் கட்டத் திட்டத்துக்கு மத்திய அரசு 50 சதவீத நிதி பங்களிப்பை வழங்கவேண்டும்’ என்று கோரிக்கைகள் வைத்துள்ளார்.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading