ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''நீர்த்துப் போன மாண்டஸ் புயல்.. பில்டப் செய்யும் ஸ்டாலின்''- எடப்பாடி பழனிசாமி பரபர பேச்சு!

''நீர்த்துப் போன மாண்டஸ் புயல்.. பில்டப் செய்யும் ஸ்டாலின்''- எடப்பாடி பழனிசாமி பரபர பேச்சு!

முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

நீர்த்துப் போன மாண்டஸ் புயலை பேரிடர் என பில்டப் செய்வதா என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருப்பூர் குண்டடம் பகுதியில், மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக பதவியேற்று 19 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மக்கள் என்ன பலனடைந்தார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என வினவினார். திமுகவில் ஆட்களே இல்லை என்றும், அதிமுகவில் இருந்தவர்கள்தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றும் ஈபிஎஸ் கூறினார்.

மேலும் நீர்த்துப் போன மாண்டஸ் புயலை பேரிடர் என பில்டப் செய்வதா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிய அவர், கஜா புயல், கொரோனா போன்ற பேரிடர்களை கையாண்டு சாதனை படைத்தது அதிமுக அரசு என பெருமிதம் கொண்டார்.

First published:

Tags: Cyclone Mandous, Edappadi Palaniswami, MK Stalin