Home /News /tamil-nadu /

ஓசூர் முத்தூட் கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

ஓசூர் முத்தூட் கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஓசூர் முத்தூட்டில் கொள்ளையடித்தவர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த தமிழக காவல்துறையினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ளது முத்தூட் பைனான்ஸ் நிறுவனம். நகைகளை வாங்கி அடமானம் வைத்து, நிதியளிக்கும் நிறுவனமாக செயல்பட்டுவருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நேற்று காலையில் திடீரென முகமூடி அணிந்தபடி வந்த துப்பாக்கியுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. வெளியே நின்ற காவலரை துப்பாக்கி முனையில் பிடித்துவைத்துக்கொண்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் 96 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். நகரின் முக்கியமான பகுதியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதனையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடினர். நகையில் இருந்த ஜி.பி.எஸ் உதவியுடன் கொள்ளையர்களைத் தேடிய தனிப்படை போலீசார், ஹைதராபாத் பகுதியில் சம்சாத்பூர் என்ற இடத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 6 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள், 2 கத்திகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


    இந்தநிலையில் காவல்துறையினர் விரைவான நடவடிக்கைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு, 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    Tags: CM Edappadi Palaniswami

    அடுத்த செய்தி