தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

இபிஎஸ்-ஓபிஎஸ்

சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.

  • Share this:
சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கோதாவரி - காவிரி திட்டத்தை இணைப்பது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா தொற்று பரிசோதனையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திய பழனிசாமி, கடந்த ஆண்டை விட தற்போது நான்கு மடங்கு தொற்று அதிகரித்துள்ளதாகவும், பரிசோதனை முடிவுகளை மூன்று, நான்கு நாட்களுக்கு காலம் தாழ்த்தாமல் விரைந்து அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றதால் வர இயலவில்லை என்றும், தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது எனவும் தெளிவுபடுத்தினார். அப்போது சசிகலா தொடர்பான ஆடியோ வெளியிடப்படுவது குறித்து எதிர்க்கட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பழனிசாமி, சசிகலா அதிமுகவில் இல்லை என்றும், அவர் அமமுக தொண்டர்களோடு பேசியிருப்பதாகவும் விளக்கினார்.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்தார்.

Must Read : தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் 14ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு - முழு விவரம்

அரசு பங்களாவைக் காலி செய்த ஓ.பன்னீர்செல்வம், தற்காலிகமாக தி.நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். தற்போது அரசு பங்களாவிலிருந்து பொருட்கள் அந்த இல்லத்திற்கு மாற்றப்படும் பணிகள் நடைபெற்றுவருவதால் தனியார் விடுதியில் தங்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அவரை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பானது தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதை காட்டும் நோக்கில் நடைபெற்றதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: