அதிமுக அலுவலகத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய ஆலோசனை

அஇஅதிமுக அலுவலகம்

9 மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை.

  • Share this:
எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக 9 மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள தொகுதிகளில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், சென்னையில் தோல்விக்கான காரணம் குறித்தும், அடுத்த கட்டமாக கட்சி ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்கள் 9 பேருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாவட்ட செயலாளர்கள் ராஜேஷ், வெங்கடேஷ்பாபு, பாலகங்கா, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சத்யா, அசோக் விருகை ரவி, ஆதிராஜாராம், கே.பி.கந்தன் ஆகியோரும், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் பா.வளர்மதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் உள்ளபோதும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இன்றைய தினத்தில் அவர் அரசு பங்களாவை காலி செய்து புது வீடு பால் காய்சும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதிமுக தலைமையில் ஏற்கனவே யார் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பிரச்சனையில் கடந்த மாதம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இறுதியாக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் அதன் பின்னர் முதல் முறையாக அதிமுக அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி, இன்று இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக அறிக்கை அரசியல் ரீதியாக கொடுத்து வருகிறார்கள், மேலும் மத்திய அரசுக்கு கடிதமும் தனி தனியாக அனுப்பி வருகிறார்கள்.

அதேபோல சசிகலா ஆடியோ விவகாரமும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சோமாத்தூர் சுப்பிரமணியம் பெயரில் வெளியான கண்டன அறிக்கை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Must Read : கொரோனா இறப்புச் சான்றில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும் சான்றிதழில் குளறுபடி - ராமதாஸ் குற்றச்சாட்டும்

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனியாக மேற்கொள்ளும் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
Published by:Suresh V
First published: