ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க அரசுதான் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாடல்

பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க அரசு தான் என்று திருவண்ணாமலை பிரச்சாரத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

 • Share this:
  திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் எஸ்.தணிகைவேலுக்கு தாமரை சின்னத்திலும், கீழ்பெண்ணாத்தூர் தொகுதி பா.ம.க வேட்பாளர் மீ.கா.செல்வகுமாருக்கு மாம்பழம் சின்னத்திலும், திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். பிரச்சாரத்தில் பேசிய அவர், ‘இரட்டை வேடம் போடுபவர் மு.க.ஸ்டாலின். ஜாதி, மதம் பார்க்காதவர்கள் அதிமுக இயக்கம். பாஜகவுடன் இணைந்து மத்தியில் ஆட்சி அமைத்தபோது மதவாத கட்சி பாஜக என்று தெரியவில்லையா என மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.

  திமுக கார்ப்பரேட் கம்பெனி குடும்பத்திற்கு மட்டுமே நல்லது செய்வார்கள். காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு அரசு திமுக தான். அதிமுக தலைமையிலான அமைக்கப்பட்ட கூட்டணி வெற்றிக் கூட்டணி என்பதை இந்தத் தேர்தலில் மக்கள் உணர்த்துவார்கள். பத்தாண்டு காலம் திமுக ஆட்சியில் இல்லாததால் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார். திமுக 1996 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்திருந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது என்று கூறியவர், ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பங்குண்டு. ஒரு சிலர் அதை பிரித்துப் பார்க்கின்றனர்.

  கருணாநிதி உயிருடன் இருந்தபோது மு.க.ஸ்டாலினால் தலைவராக முடிந்ததா? அவருடைய தந்தையே அவரை நம்பவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் மு.க.ஸ்டாலினை தலைவராக ஆக்கவில்லை. அப்படி இருக்கும்போது தமிழக மக்கள் எப்படி மு.க.ஸ்டாலினை நம்புவார்கள். திமுக கட்சி அல்ல. கார்ப்பரேட் கம்பெனி. அவர்கள் குடும்பத்திற்கு தான் நல்லது செய்வார்கள்.
  வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல், திமுக என்றால் ஊழல்.. ஊழல் என்று சொன்னால் திமுக.. ஊழல் என்ற வார்த்தைப் பிறந்ததற்கு காரணமே கருணாநிதிதான்.

  இங்கு உள்ளவர் எம்எல்ஏவாக இருந்தபோது எப்படி இருந்தார். தற்போது எப்படி இருக்கிறார். கல்லூரிக்கு அதிபதி. மக்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் இருக்கிறார். கிரிவலப் பாதையை அதிமுக அரசு சிறப்பாக அமைத்து இருக்கிறது. அறிவொளி பூங்கா திருவண்ணாமலையில் திறக்கப்பட்டுள்ளது. யாத்திரை நிவாஸ் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: