முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓபிஎஸ் - இபிஎஸ்

OPS - EPS : ஒபிஎஸ் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து, ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். விவரம் அறிந்த ஓ.பி.எஸ் சென்னையில் இருந்து உடனடியாக தேனி வந்தார்.  தனது தாயாரின் உடலை பார்த்தும் காலை பிடித்து முகம் புதைத்து கதறி அழுதார். மேலும், ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுகவை சேர்ந்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் தாயாரின் இறுதி சடங்குகள் முடிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “அண்ணன் ஓபிஎஸ் தாயார் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தாயாரை இழந்து வாடும் பன்னீர் செல்வம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: ADMK, OPS - EPS, Tamilnadu