ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோடிக்கணக்கான கிலோ அரிசி பாழாய் போனதற்கு திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது - எடப்பாடி பழனிசாமி கேள்வி

கோடிக்கணக்கான கிலோ அரிசி பாழாய் போனதற்கு திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது - எடப்பாடி பழனிசாமி கேள்வி

எடப்பாடி பழனிசாமி கேள்வி

எடப்பாடி பழனிசாமி கேள்வி

Edappadi Palaniswami : தஞ்சாவூரில் 1,850 மூட்டை அரிசி கெட்டுப்போயுள்ளதை சுட்டிக்காட்டி, மக்களின் வரிப் பணம் பல கோடி ரூபாய் விரயமாக்கப் பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவாசாயிகளிடம் இருந்து, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் பெறப்பட்டு தமிழகம் முழுவதும் அரவைக்கு அனுப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் இந்த நெல் தமிழகத்தில் உள்ள 21 அரசு அரவை ஆலைகளுக்கும், 474 தனியார் அரவை ஆலைகளுக்கும் இரயில்கள் மூலம் அனுப்படும். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 34 அரவை ஆலைகளுக்கு கொள் முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டன.

அரவைக்குப் பின் பெறப்படும் அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். இந்நிலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக குடோன்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்களை கடந்த மார்ச் மாதம் இந்திய உணவு கழக அதிகாரிகளால் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் நடைபெற்ற இந்த ஆய்வில் பொதுமக்கள் பயன்படத்த முடியாத கெட்டுப்போன அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அங்கு 1,850 மூட்டைகளில் 92 டன் எடையுள்ள புழுத்த மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத கெட்டு போன அரிசி இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், கோடிக்கணக்கான கிலோ அரிசி பாழாய் போனதற்கு திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்த நெல்மணிகளை பாதுகாப்பாக வைக்கத் தவறியதாலும், குறித்த நேரத்தில் அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பாததாலும், மக்களின் வரிப் பணம் பல கோடி ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Must Read : கள்ளக்குறிச்சி பள்ளியில் இருந்து திருடிச்சென்ற பொருட்களை ஒப்படைக்கும் மக்கள்

இந்த அவலங்களை சுட்டிக்காட்டிய போதெல்லாம், உணவுத்துறை அமைச்சர் பதிலளிப்பது போல் சால்ஜாப்பு வார்த்தைகளை சொல்வதற்கு காட்டிய அக்கறையை, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல்மணிகளை பாதுகாப்பதில் காட்டவில்லை என விமர்சித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் எத்தனை லட்சம் டன் அரிசி வீணாகி உள்ளது என்பதை இந்திய உணவுக் கழகம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, Rice, Thanjavur