Home /News /tamil-nadu /

அம்மா மினி கிளினிக் மூடல் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அம்மா மினி கிளினிக் மூடல் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Amma Mini Clinic : அதிமுக ஆட்சியின் போது தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்ட, 2000 அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அரசின் இந்த முடிவுக்கு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை பெரியார் திடலில் உள்ள, கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் மீண்டும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, திராவிட கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தொற்று பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இரண்டாவது அலையின் போது அமைக்கப்பட்ட, பெரியார் திடல் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை 41 படுக்கைகளுடன் மீண்டும் திறந்திருப்பதாக குறிப்பிட்டார்.

    ஓராண்டுக்கான தற்காலிக அமைப்பாக தான் அம்மா கிளினிக்குகள் அமைக்கப்பட்டதாகவும், தொடங்கப்பட்ட இரண்டாயிரம் அம்மா கிளினிக்குகளில் செவிலியர்கள் கூட நியமிக்கப்படவில்லை எனவும் கூறினார். அம்மா கிளினிக்குகளில் பணியாற்றி வந்த மருத்துவர்கள், கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    Must Read : சிக்காத ராஜேந்திர பாலாஜி; திணறும் காவல்துறை

    இந்த நிலையில், அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக வெளியான அறிவிப்பிற்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு முந்தைய ஆட்சியில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டதாக கூறியுள்ளார்.

     



    Read More : தமிழகத்தில் 3 நாட்களுக்கு மூடுபனி எச்சரிக்கை - வானிலை மையம்

    அம்மா என்ற பெயர் உள்ள காரணத்திற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த திட்டத்தை திமுக அரசு மூடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை திமுக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஈ.பி.எஸ். கூறியுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Edappadi Palaniswami, Ma subramanian

    அடுத்த செய்தி