முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மீண்டும் ஒரு லாக்அப் மரணம்: சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டம்

மீண்டும் ஒரு லாக்அப் மரணம்: சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்துக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையை ஒட்டிய ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (எ) அப்பு. அவரை குற்ற வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மயக்கமடைந்த அப்பு எ ராஜசேகரை காவல்துறையினர் ஸ்டான்லி மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதித்தபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் மேற்கு இணை ஆணையர் ராஜேஸ்வரி மற்றும் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோத் நேரில் விசாரணை நடத்தினர். வடக்கு காவல் கூடுதல் ஆணையர் அன்பு கொடுங்கையூர் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினார். ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதத்தில் சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலைத்தில் விசாரணை கைதி விக்னேஷின் லாக்கப் மரணம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விக்னேஷ் தப்பி ஓடினார் என்று காவல்துறையால் அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் விக்னேஷ் உடலில் காவல்துறை தாக்கிய காயங்கள் இருந்தன என்ற பின்னர் அறிக்கையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்திவரும் நிலையில், காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் எம்.ஜி.முனாஃப், சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.குமார், ஊர்க்காவல் படை வீரர் பி.தீபக், ஆயுதப்படை காவலர் பி.ஜெகஜீவன், ஆயுதப்படை காவலர் வி.சந்திரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு லாக்கப் மரணம் என்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மீண்டும் ஒரு லாக்-அப் மரணம், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது. இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இவ்வாட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துவிட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விடியாஅரசில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Edappadi Palaniswami