Home /News /tamil-nadu /

அதை மறைக்கவே கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் ரெய்டு : எடப்பாடி பழனிசாமி கருத்து

அதை மறைக்கவே கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் ரெய்டு : எடப்பாடி பழனிசாமி கருத்து

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami : பொங்கல் பரிசு தொகுப்பு ஊழலை மறைக்கவே கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பொங்கல் பரிசு தொகுப்பு ஊழலை மறைக்கவே கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தித்தார். அப்போது அவர் கூறும்போது, திமுக அரசு தற்போது பொங்கல் பரிசு அறிவித்து 21 பொருட்கள் வழங்கியுள்ளனர். அதில் அனைத்தும் தரமற்ற பொருளாக இருந்தது. ஒரு சில இடங்களில் 15 பொருட்கள் 16 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டது. பொருட்கள் எடை குறைவாகவும் இருந்தது பொங்கல் பரிசு கொள்முதலுக்கு திமுக அரசு 1300 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் சுமார் 500 கோடி முறைகேடு நடந்துள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கரும்பு கொள்முதல் செய்தலில் ஊழல், ஒரு கரும்பின் விலை அரசு ரூ.33  என விலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு 16 ரூபாய் மட்டும் வழங்கினர்.  இதில் கரும்புக்கு ரூ 17 ஊழல் நடந்துள்ளது. மொத்தமாக ரூ 34 கோடி ஊழல் நடந்துள்ளது.  மஞ்சள் மிளகாய் பொடி கலப்படம், கோதுமை ரவையில் பூச்சி வண்டு,  புளியில் பல்லி விழுந்துள்ளது . இதை வெளிப்படுத்திய நபர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளார். இதனால் அவரது மகன் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதில் ஒரு உயிரை பலி கொடுத்தனர் என்று கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் 2.5 டன் வெல்லத்தை தரமற்றது என அறிக்கை கொடுத்து தடை செய்துள்ளனர். தரமற்ற வெல்லம் என்பதற்கு இதுவே உதாரணம். பொங்கல் பை பாதிப்பேருக்கு கிடைக்கவில்லை பாதி பேருக்கு கிடைத்துள்ளது இதன் விலை ரூ 60 ரூபாய் என நிர்ணயித்துள்ளனர் ஆனால் பையின் விலை 25 முதல் 30 ரூபாய் வரை மட்டுமே இருக்கும் இதில் 60 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்றார்.

மேலும், கொரோனோ வைரஸ் நோய் தொற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 981 என கணக்கு காண்பிக்கின்றனர். ஆனால் 40,000 முதல் 50,000 பேருக்கு நோய் தொற்று உள்ளது. திமுக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வில்லை நிர்வாகத் திறமையற்ற அரசு. என்ற எடப்பாடி பழனிசாமி, இந்தக் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது பொய்யான ரெய்டு நடத்தி வருகின்றனர்.  மேலும் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

Read More : சென்னையில் வீட்டின் பூட்டை உடைக்காமல் தங்க நகை கொள்ளை...!

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நிறைய இடங்களில் அதிமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர் அதை அறிவிக்காமல் திமுக வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதனால் தற்போது உயர் நீதிமன்றம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சில வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. அதன்படி நியாயமாக ஜனநாயக படி திமுக அரசு தேர்தல் நடத்துவார்கள் என நம்புகிறோம் என்றும் தெரிவித்தார்.

Must Read : கும்பகோணத்தில் தயாராகிறது பிபின் ராவத் ஐம்பொன் சிலை : டெல்லியில் நிறுவ திட்டம்

டில்லியில் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளில் தமிழகம் பங்கு பெற நடவடிக்கை இல்லை என செய்தியாளர்கள் கேள்விக்கு , தமிழக முதல்வர் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லை என்று பதிலளித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, DVAC, Edappadi Palaniswami

அடுத்த செய்தி