முதல்வர் வேட்பாளர்களில் தனக்குத்தானே வாக்களிக்கும் வாய்ப்புபெற்ற எடப்பாடி பழனிசாமி

முதல்வர் வேட்பாளர்களில் தனக்குத்தானே வாக்களிக்கும் வாய்ப்புபெற்ற எடப்பாடி பழனிசாமி

வாக்களிக்கும் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் வேட்பாளராக தங்களை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்டுள்ள ஐந்து பேரில் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனக்குத் தானே வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

  • Share this:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்திலுள்ள சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் காலையிலையே வந்து தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி, மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருடன் வந்து வாக்குப் பதிவு செய்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவருடைய வாக்கைப் பதிவு செய்தார்.

அதேபோல, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சிலுவம்பாளையத்தில் அவரது மனைவி, பேரனுடன் சென்று வாக்குப் பதிவு செய்தார். தமிழகத்தில் இந்த முறை ஐந்து பேர் தங்களை முதல்வர் வேட்பாளர்காள முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்டுள்ளனர். தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க சார்பில் டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், நாம் தமிழர் சார்பில் சீமான் தங்களை முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தியுள்ளனர். அதில், எடப்பாடி பழனிசாமி மட்டுமே அவருக்கு அவரே வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பழனிசாமி இன்று எடப்பாடி தொகுதியிலுள்ள சிலுவம்பாளையத்திலுள்ள அரசுப் பள்ளியில் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.முக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆயிரம்விளக்கு தொகுதியின் கீழ் வரும் தேனாம்பேட்டை பகுதியில் வாக்களித்தார். கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் சென்னை அடையாறு பகுதியில் வாக்களித்தார். திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான் சென்னை விருகம்பாக்கம் தொகுதியின் கீழ் வரும் வளசரவாக்கம் பகுதியில் வாக்களித்தார். அதேபோல, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்துள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: