முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சசிகலா, ஓபிஎஸ் என அனைவருக்கும் துரோகம் செய்தவர் இபிஎஸ்... ஈரோட்டில் தயாநிதி மாறன் பரப்புரை..!

சசிகலா, ஓபிஎஸ் என அனைவருக்கும் துரோகம் செய்தவர் இபிஎஸ்... ஈரோட்டில் தயாநிதி மாறன் பரப்புரை..!

தயாநிதிமாறன் விமர்சனம்

தயாநிதிமாறன் விமர்சனம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று தயாநிதி மாறன் வலியுறுத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தினத்தில் நடைபெற உள்ளது.  தேர்தலுக்கான பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அவரை ஆதரித்து திமுக எம்.பி தயாநிதி மாறன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பாரதிதாசன் வீதியில் வாக்கு சேகரித்த அவர், இடைத்தேர்தலில் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

சசிகலா, பன்னீர்செல்வம் என அனைவருக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்கள் அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதிமுக வழக்கில் உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் தயாநிதி மாறன் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

First published:

Tags: Dayanidhi Maran, Edappadi Palaniswami, Erode Bypoll, Erode East Constituency, O Pannerselvam, Sasikala