Home /News /tamil-nadu /

அமித்ஷாவை சந்தித்து பேசிய ஓபிஎஸ்-இபிஎஸ்... தமிழக அரசியல் களத்தில் மாற்றம் வருமா?

அமித்ஷாவை சந்தித்து பேசிய ஓபிஎஸ்-இபிஎஸ்... தமிழக அரசியல் களத்தில் மாற்றம் வருமா?

அமித் ஷாவுடன் அதிமுகவினர்

அமித் ஷாவுடன் அதிமுகவினர்

தமிழகத்தின் அரசியல் சூழல், கட்சி சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசப்பட்டதாக தகவல்

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர். பின்னர், அங்கே பேசப்பட்டவை குறித்து எடப்பாடி பழினிசாமி விளக்கம் அளித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்து பேசினர். இதில், அரசியல் ரீதியாக எதுவும் பேசப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் பயணமாக, தனித்தனியாக டெல்லி புறப்பட்டு சென்ற ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் திங்கட்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். அப்போது, தமிழக வளர்ச்சிக்காக காவிரி - கோதாவரி நதிகள் இணைப்பு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழகத்தின் அரசியல் சூழல், கட்சி சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அதிமுக எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பால், தமிழக அரசியல் களத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

    நரேந்திர மோடியுடன் சந்திப்பு


    இந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அமித் ஷாவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாக தெரிவித்தார். மத்திய அமைச்சரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான கிஷன் ரெட்டியையும் சந்தித்து பேசினர். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பினார். இதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் அவர் பயணம் செய்தார். அதன் பிறகு, எடப்பாடி பழனிசாமியும் தனி விமானத்தில் திரும்பினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    உற்சாக வரவேற்பு:

    இந்நிலையில், கர்நாடக எல்லையில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்த எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து காரில் அத்திப்பள்ளி சுங்கச்சாவடி பகுதிக்கு வந்தபொது, ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைதொடர்ந்து, கிருஷ்ணகிரி வழியாக எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றடைந்தார்.

    Must Read : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

    இதற்கிடையில், “அதிமுக கட்சியை விற்பனை செய்ய எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் டெல்லிக்கு சென்றதாக” அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி விமர்சித்துள்ளார்.

    இந்நிலையில், “எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மரியாதை நிமித்தமாகவே பிரதமரை சந்தித்ததாகவும், எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது தொடர்பாக பிரதமரிடம் பேசியதாக கூறுவதில் உண்மையில்லை” என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Amith shah, Edappadi Palaniswami, OPS - EPS

    அடுத்த செய்தி