ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சபாநாயகர் அப்பாவு அரசியல் ரீதியாக செயல்படுகிறார் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சபாநாயகர் அப்பாவு அரசியல் ரீதியாக செயல்படுகிறார் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவை தலைவர் அரசியல் ரீதியாக செயல்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரம் குறித்து உடனடியாக சபாநாயகர் முடிவை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தர்ணாவில்  ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அதிமுக உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்கு சபாநாயகர் அப்பாவு கடும் கண்டனம் தெரிவித்தார்.

  சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று பங்கேற்காத அதிமுக உறுப்பினர்கள் இன்று பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்படாத நிலையில், அவரது இருக்கை அருகிலேயே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அமர்ந்திருந்தார்.

  கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கியதும் எழுந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரம் குறித்து ஏற்கனவே தான் அளித்த கடிதம் மீதான முடிவை தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினார் . ஆனால் கேள்வி நேரம் முடிந்தவுடன் இது பற்றி பேசலாம் எனவே இருக்கையில் அமருங்கள் என சபாநாயகர் அப்பாவும் வலியுறுத்தினார். இருப்பினும் தொடர்ந்து எழுந்து நின்றபடியே இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி, கருத்துக்களை முன்வைத்தார். அவருக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர்.

  இதனால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை அருகே அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என அவர்கள் முழகக்கங்களை எழுப்பிய படியே இருந்தனர். அதிமுக உறுப்பினர்களின் தர்ணாவினால் சட்டப்பேரவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.

  Also Read : டிசம்பர் 4-ம் தேதியே ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் வெளியான புதிய தகவல்

  இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் பேரவையிலிருந்து வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவு அப்பாவு உத்தரவிட்டார்.

  இதையடுத்து அவை காவலர்கள் அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் பேரவையிலிருந்து வெளியேற்றினர் ஒரு சில உறுப்பினர்கள் காவலர்களின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

  அதிமுக உறுப்பினர்களின் இந்த  நடவடிக்கைக்கு அவை முனைவர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார் இதேபோன்று சபாநாயகர் அப்பாவும் அதிமுக உறுப்பினர்களை கண்டித்தார். இதைத்தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களை இரண்டு நாட்கள் பேரவையிலிருந்து நீக்கம் செய்வதாக சபாநாயகர் உத்தரவிட்டார் ஆனால் அவை முன்னவர் துரைமுருகன் இந்த தண்டனையை ஒரு நாளாக குறைக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இன்று ஒரு நாள் மட்டும் அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

  ' isDesktop="true" id="820774" youtubeid="PNrz7739tmg" category="tamil-nadu">

  சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாயளர்களை சந்தித்தார். அப்போது. ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சி துணைதலைவராக தேர்ந்தெடுத்து அதிமுக பெரும்பான்மையான சட்மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அதை சட்டமன்ற தலைவரிடம் சுமார் 2 மாதங்களுக்கு முன்பே ஒப்படைத்தோம். அதன்பின் நினைவூட்டு கடிதம் 2 முறை வழங்கினோம். நேற்றைய தினம் வரை சட்டமன்ற தலைவர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

  நியாமாக நடுநிலையோடு சட்டப்பேரவை தலைவரகள் தற்போது அரசியல் ரீதியாக செயல்படுவதாக நாங்கள் பார்க்கின்றோம். பேரவை தலைவர் கேள்வி நேரம் முடிந்து நீங்கள் செல்லலாம என்கிறார். அப்படியென்றால் ஸ்டாலின் ஆலோசனைப்படி தான் சட்டப்பேரவை தலைவர் செயல்படுகிறார் என்று கருதுகிறோம் என்று தெரிவித்தார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: ADMK, Edappadi palanisamy, TN Assembly