ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திரைப்படங்கள் வெளியீட்டில் உதயநிதி தலையீடு... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திரைப்படங்கள் வெளியீட்டில் உதயநிதி தலையீடு... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

உதயநிதி - எடப்பாடி பழனிசாமி

உதயநிதி - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ariyalur, India

அரியலூர் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசி எடப்பாடி பழனிசாமி, திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார். நீட் தேர்வு விலக்கு, கல்வி கடன் ரத்து உள்ளிட்ட பொய் அறிவிப்புகள் மூலம் ஆட்சியை கைப்பற்றியதாகவும் விமர்சித்தார். மேலும் தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை எங்கும் நிறைந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள், உதயநிதி ஸ்டாலினின் தலையீட்டால் வெளியிட முடியவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசு புதிய திட்டங்களை கொண்டு வராமல், அதிமுகவின் திட்டங்களை முடக்குவதிலேயே முனைப்புடன் செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

First published:

Tags: Edappadi Palaniswami, Udhayanidhi Stalin