காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில் ராமர் பாதம் மற்றும் 16 புண்ணிய நதிகளின் தீர்த்தம் அடங்கிய வேன் ஒன்று தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு ஊராக எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் வீடுகளை வைத்து பூஜை செய்யப்படுகிறது. சுமார் ஒரு கோடி வீடுகளில் ராமர் பாதம் வைத்த பின்னர் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் ராமர் பாதம் மற்றும் புனித தீர்த்தத்தை வழங்க ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
அதன் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த வேன் பயணம் தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ,தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சென்ற இந்த வேன் சேலம் மாவட்டத்தில் இந்த பாதம் ஒவ்வொரு வீடாக கொண்டு செல்லப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது . இதனிடையே சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை வந்தார்.
பின்னர் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன், அவர் அலோசனை நடத்தினார். குறிப்பாக வர உள்ள மாநகராட்சி தேர்தல் பணி குறித்து அலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசும் போது, மாநகராட்சி தேர்தல் விரைவில் வர உள்ளது, இந்த தேர்தல் பணியில் சிறப்பாக ஈடுபடவேண்டும். திமுக-வினர் ஏதேனும் திள்ளுமுள்ளு செய்து வெற்றிபெற முயற்சிப்பார்கள். அதற்கு இடம் தரக்கூடாது. மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக திமுகவினர் அறிவித்தனர்.
Also Read : சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு பெருகும் ஆதரவு!
ஆனால் அவ்வாறு வழங்கவில்லை. இது போன்ற திமுக வின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்து செல்லவேண்டும். முதியோர் உதவித் தொகை, திருமண உதவி திட்டம், போன்ற பல்வேறு திட்டங்களை நாம் கொண்டு வந்தோம். இந்த திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறி, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.
இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடப்பதை அறிந்த இராமர் பாதம் வேன் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு இன்று பகலில் வந்தது.
இதனை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி ராமர் பாதத்தையும் புனித தீர்த்தத்தையும் தொட்டு வணங்கினார்.அதிமுக கூட்ட நிகழ்ச்சி வந்திருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் ராமர் பாதத்தை தொட்டு வணங்கினர். இதன் பிறகு ராமர் பாதம் வேன் ஓமலூர் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்றது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.