Home /News /tamil-nadu /

சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு - பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்கும் தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு

சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு - பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்கும் தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சமஉரிமை உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதியைக் காக்கும் வகையில் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    பெண்களுக்கு பூர்வீக சொத்தில் சம பங்கினை வழங்க வேண்டும் என்ற சட்ட திருத்தத்தை 2005-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.

    ஆனால், 2005-க்கு முன்பு பெற்றோர் உயிரிழந்தாலோ, பாகப்பிரிவினை மேற்கொண்டிருந்தாலோ பெண்களுக்கு தங்கள் பங்கினைப் பெருவதற்கான சில சிக்கல்கள் இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் 2005-க்கு முன்பு தந்தை உயிரிழந்ததால் சொத்தின் பங்கினை மகள் பெற முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் இன்று, பூர்விக சொத்தில் பெண்களுக்கான உரிமையை மறுக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர். இந்த தீர்ப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவில், ‘சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி