வெளிநாடு பயணத்தின் போது முதலமைச்சர் பொறுப்பு யாருக்கு?

”முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத் திட்டத்திற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது”

Web Desk | news18
Updated: August 22, 2019, 9:30 AM IST
வெளிநாடு பயணத்தின் போது முதலமைச்சர் பொறுப்பு யாருக்கு?
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Web Desk | news18
Updated: August 22, 2019, 9:30 AM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக வெளிநாடு செல்ல இருக்கும் நிலையில், தனது பொறுப்புகளை வேறு யாருக்கும் அளிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சரின் இந்த பயணத் திட்டத்திற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுவாக பிரதமர் வெளிநாடு செல்லும் போது முக்கிய முடிவுகள் எடுக்கும் பொறுப்புகளை தனக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சரிடம் ஒப்படைத்துச் செல்வார். அதேபோல, மாநில முதல்வர்களும் வெளிநாடு செல்லும் போது, மூத்த அமைச்சரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துச் செல்வார்கள்.


இந்நிலையில், முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போது தனது பொறுப்புகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமோ அல்லது அமைச்சரவை சகாக்களிடமோ ஒப்படைக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி வெளிநாட்டு பயணத்தின்போது தனது பொறுப்புகளை அவரே கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய முடிவுகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளிநாட்டில் இருந்தபடியே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்றும் முக்கிய கோப்புகளுக்கு பேக்ஸ் மூலம் ஒப்புதல் அளிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க... ஊர்தோறும் சிறப்பு குறைதீர் கூட்டம்... மக்கள் எப்படி பயன்படுத்தலாம்

Loading...

First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...