ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான் திமுக அரசின் தாரக மந்திரம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான் திமுக அரசின் தாரக மந்திரம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இன்று சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி உடன் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  ஆளுநர் ரவியை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் நடைபெற்று வரும் மோசமான சம்பவங்களை ஆளுநரிடம் பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளோம். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசின் என்.ஐ.ஏ முகமை தகவல் தெரிவித்திருந்தும் தமிழ்நாடு அரசு பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டது. உளவுத்துறை கவனமாக செயல்பட்டு இருந்தால் குண்டுவெடிப்பு நடக்காமல் இருந்திருக்கும்.

  தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. போதை பொருளை இந்த அரசு நிர்வாக திறமையின் காரணமாக தடுக்க முடியவில்லை. அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் கிடைத்துக் கொண்டுள்ளது.

  ' isDesktop="true" id="843016" youtubeid="czVc9TmKTJU" category="tamil-nadu">

  போதை பொருள் தடுப்பு தொடர்பாக பல்வேறு முறை நான் பேசியுள்ளேன. ஆனால் திறமை இல்லாத முதலமைச்சர் காவல்துறையை முறையாக செயல்படுத்த முடியாமல் உளவுத்துறை சீரழிந்து உள்ளது. தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் தங்கு தடை இல்லாமல் நடைபெற்று வருகிறது.

  Also Read : FIFA உலகக்கோப்பை கால்பந்தை பார்க்க 50ஜிபி இலவச டேட்டாவா? எச்சரிக்கும் போலீஸ்

  திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது இந்த ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன் என்பதுதான் தாரக மந்திரமாக உள்ளது. திராவிட மாடல் என்றால் கமர்சியல் கலெக்ஷன், கரப்ஷன் என்று தான் உள்ளது. எந்தத் துறை எடுத்தாலும் அதில் லஞ்சம் தான் உள்ளது. லஞ்சம் இல்லாத துறையே தமிழகத்தில் இல்லை இதையும் சுட்டிக்காட்டி ஆளுநரிடம் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: ADMK, DMK, Edappadi palanisamy