Home /News /tamil-nadu /

’நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம்’: சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் முதல்வர்!

’நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம்’: சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் முதல்வர்!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

சென்னை - சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

  • News18
  • Last Updated :
சென்னை- சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்த நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை - சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு உள்ளதால் சுற்றுச்சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றும் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அதில், “இப்பகுதி தொழில் மண்டலம் ஆகும். எட்டு வழிச் சாலை திட்டம் மூலம் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் என நம்புகிறோம். எனினும் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளர்! தினகரன் குற்றச்சாட்டுக்கு பாஜக பதில்





தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Rahini M
First published:

Tags: Cm edappadi palanisamy, Lok Sabha Key Constituency, Salem Chennai Expressway

அடுத்த செய்தி