ஊர்ந்து சென்று முதல்வராக நான் என்ன பல்லியா? பாம்பா? - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

ஊர்ந்து சென்று முதல்வராக நான் என்ன பல்லியா? பாம்பா? - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி(மாதிரிப் படம்)

விவசாயிகள் கஷ்டத்தை நான் உணர்ந்தவன். வெயில், மழை, இரவு, பகல் என எதையும் பார்க்காமல் ரத்தம் வியர்வை சிந்தி உழைக்கும் ஒரே தொழில் விவசாயம்

 • Share this:
  தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க அரசையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தி.மு.க-வினர் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர். முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற விதம் குறித்தும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்காமும் விதமாக கடலூர் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

  கடலூர் மாவட்டம் புவனகிரியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசியவர், “ நான் ஊர்த்து போய் முதல்வராக பல்லியா? பாம்பா?. நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன். விவசாயிகள் கஷ்டத்தை நான் உணர்ந்தவன். வெயில், மழை, இரவு, பகல் என எதையும் பார்க்காமல் ரத்தம் வியர்வை சிந்தி உழைக்கும் ஒரே தொழில் விவசாயம்.

  Must Read : மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது ஸ்டாலினுக்காக அல்ல - எடப்பாடி பழனிசாமி

   

  இதைப்பற்றி ஸ்டாலினுக்கு சிந்திக்க தெரியாது. சிந்தித்தாலும் பேசத் தெரியாது. என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் தான் செய்துகொண்டிருக்கிறோம். எடப்பாடி விவசாயி, விவசாயி என்று குதிப்பதாக ஸ்டாலின் சொல்லுகிறார். நான் குதித்தால் உங்களுக்கு என்ன?” என ஆவேசமாக பேசியுள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: