மு.க.ஸ்டாலின் என்னை மட்டுமல்ல விவசாயிகளையும் கொச்சை படுத்துகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலின் என்னை மட்டுமல்ல விவசாயிகளையும் கொச்சை படுத்துகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

திமுக என்றாலே ரவுடி கட்சி, அராஜக கட்சி, அடாவடி பண்ணுகின்ற கட்சி என்று கூறினார்.

 • Share this:
  கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லும் பொதுக்கூட்டங்களில் நொடர்ந்து அதிமுகவை பற்றியும் தமது கூட்டணி கட்சிகளைப் பற்றியும் அவதூறாகப் பேசி வருவதாக குற்றம் சாட்டினார்.

  இது குறித்து பேசுகையில், “என்னை போலி விவசாயி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் என்னை மட்டுமல்ல, அனைத்து விவசாயிகளையும் கொச்சை படுத்தி வருகின்றார்.

  தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின், ஊழலை மட்டுமே செய்து வந்தார். தற்போது, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.பி.வேலுமணி சிறப்பாக பணியாற்றி 100-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி குறித்து திமுக தொடர்ந்த அவதூறு பரப்பி வருகின்றது” என குற்றம் சாட்டினார்.

  “தமிழக முதலமைச்சராக கருணாநிதி என்று வந்தரோ அன்று முதலே ஊழல் பிறந்து விட்டது. திமுக என்றாலே ரவுடி கட்சி, அராஜக கட்சி, அடாவடி பண்ணுகின்ற கட்சி” என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அப்போது கூறினார்.

  Must Read : வெற்றிலை, பாக்கு வைத்து தேர்தல் அழைப்பிதழ் வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ.

   

  இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கை பேணி காப்பதில் முதலிடம் தமிழகம்தான் என்றும், தமிழக அமைதி பூங்காவாக இருப்பதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: