• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மீனவர்களுக்காக தனி வங்கி ஏற்படுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி

மீனவர்களுக்காக தனி வங்கி ஏற்படுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  மீனவர்களுக்காக தனி வங்கி ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

  • Share this:
    கன்னியாகுமரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  மீனவர்களுக்காக தனி வங்கி ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவை இடைதேர்தல் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் 6 சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றிபெற்றவர், அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை செய்திருக்கிறார். தளவாய் சுந்தரம் முன்னாள் அமைச்சராக இருந்தவர். அவர்களுக்க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். பொன்.ராதாகிருஷ்ணன் திறமையானவர், மாவட்டம் எழுச்சிபெற ஏற்றம்பெற மத்திய அரசிடம் பேசி பல திட்டங்கள் பெற்று தந்திருக்கிறார்.

    மாவட்டம் வளர்ச்சிபெற, எழுச்சிபெற அவருக்கு வாக்களியுங்கள். கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாததால் பல திட்டங்கள் வராமல் போனது. இங்கு நம் கூட்டணி பிரதிநிதி இல்லாததால் இந்த பகுதி மக்கள் பிரச்னைகள் எங்களிடம் கொண்டுவரவில்லை. இங்குள்ள திட்டம் நிறைநிறைவேற மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிரதிநிதியாக வெற்றி பெறவையுங்கள். மத்தியிலும், மாவட்டத்திலும் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தால் எப்படி வளர்சி நடக்கும். நீங்கள் வைக்கும் கோரிக்கை நிறைவேறும்.

    முழுமையான திட்டங்கள் வந்துசேரவில்லை. சட்டமன்றம் நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வருவதில்லை. அப்படி வந்தாலும் தொகுதியைத்தான் பார்ப்பார்கள் மாவட்டத்தை கவனிக்கமாட்டார்கள். எனவே பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றால் வளர்ச்சிபெறும் ஏனென்றால் மத்தியில் பாஜக ஆட்சி எனவே திட்டங்களை கொண்டுசெல்ல முடியும்.

    தவறான, அவதூறான செய்தி பரப்புகிறார்கள். சரக்குப்பெட்டக துறைமுகம் வருவதாக அவதுறு செய்தியை தேர்தல் காரணமாக பரப்புகின்றனர். சரக்குப் பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது. மீண்டும் சொல்கிறேன் மக்கள் இதை நம்ப வேண்டாம்.  தேர்தல் நேரத்தில் திமுக, காங்கிரஸ் சேர்ந்து மீனவர்களின் ஓட்டுக்காக இதைபரப்புகிறார்கள். சிறப்பு அதிகாரிகள் மூலம் ரத்துச் செய்யப்பட்டுவிட்டது.

    மீனவர்களும் பொதுமக்களும் பொய் செய்தியை நம்ப வேண்டாம். கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்படமாட்டாது. பொய் சொல்லி அரசியல் நடத்தும் கட்சி திமுக, காங்கிரஸ் கட்சிதான். நகராட்சி மக்கள் கோரிக்கை ஏற்று மாநகராசி ஆக்கினோம். திமுக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கையை நிறை வேற்றினார்களா? எங்களுக்கு எம்.எல்.ஏ முக்கியம் அல்ல மக்கள்தான் முக்கியம். மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அம்மா அரசு. நல்ல சாலை, குடிநீர் வசதிகளை கொண்டுவருகிறோம்.

    தேர்தல் திட்டங்களை நிறை வேற்றி வருகிறோம். மிக்‌சி, கிரைண்டர் வழங்கினோம். தவறான செய்தியை பரப்புகிறார்கள். திமுகவிடம் சொல்லுங்கள் அதிமுக கொடுத்தார்கள் என்று, திமுக ஆட்சி இருண்ட ஆட்சி கடுமையானமின் வெட்டு. இன்று தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம். மத்திய பாஜக அரசு உதவிகள் செய்கின்றது. இன்று வெற்றி நடைப்போடும் தமிழகம் என்ற நிலையை அடைந்துள்ளது. விவசாயம், மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

    மீனவர்களுக்கு காங்கிரீட் வீடுகள், மானியத்தோடு, வரி விலக்கோடு வழங்கும் 18,000 லிட்டர் டீசல் 20 ஆயிரமாக வழங்குகிறோம். மண்ணெண்ணெய், மீன்பிடி தடைக்காலம் 5 ஆயிரம் கொடுப்பதை 7,500 ஆக வழங்கப்படும். மீனவர்கள் பல்வேறு பிரச்னையால் கடன் பெறுகிறார்கள்.

    Must Read : நார்வே, சுவீடன் போன்று தமிழகத்தை சொர்க்கபூமியாக மாற்ற அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் - ராமதாஸ்

     

    மீனவர்களுக்காக  தனி வங்கி ஏற்படுத்தப்படும். மீனவர்கள் விபத்தில் இறந்தால் அவர்களுக்கு நிவாரணமாக 2 லட்சத்தில் இருந்து ஐந்து லட்சமாக வழங்கப்படும். உள்நாட்டு மீனவர்களுக்காக விரிவான திட்டம் கொண்டுவரப்படும்.” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: