5000 கோடி முதலீட்டால் ஒசூர் பகுதியில் ஏராளமான வேலை வாய்ப்புகள்: எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

5000 கோடி முதலீட்டால் ஒசூர் பகுதியில் ஏராளமான வேலை வாய்ப்புகள்: எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

எடப்பாடி பழனிசாமி

அதிமுக கூட்டணி அருமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி....

  • Share this:
ஒசூர் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி மற்றும் தளி பாஜக வேட்பாளர் நாகேஷ் குமார் ஆகியோரை ஆதரித்து முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒசூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 5000 கோடி ரூபாய் முதலீட்டால் ஒசூர் பகுதியில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி கூறுகையில், அதிமுக கூட்டணி அருமையான கூட்டணி, வெற்றி கூட்டணி. ஒசூர் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து நன்மை கிடைக்க, அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள். திமுக கூட்டணி சந்தர்பவாத கூட்டணி.

தமிழகத்திலேயே மிக முக்கியமான நகரங்களில் ஒன்று ஒசூர்.  ஒசூர் தொகுதியில் மட்டும் அதிகமான தொழில் நிறுவனங்கள் வந்துக்கொண்டிருக்கிறன. 5000 கோடி முதலீட்டால் ஒசூர் பகுதியில் ஏராளமான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒசூர் என்றால் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.  தொழில் வளத்தால் அறியப்படும் பகுதியாக இருக்கின்றது.

தொழில் முதலீட்டாளர் மாநாட்டில், 600 கோடி மதிப்பீட்டில் 1000 வேலைவாய்ப்புக்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன. செல்போன் உதிரிபாக தொழிற்சாலை ஒசூர் பகுதியில் தொடங்கப்பட உள்ளது, அந்த தொழிற்சால 15,000 கோடி ரூபாயில் அமையவுள்ளது.

2400 கோடி ரூபாயில் ஏற்படுத்தப் பட்டுள்ள தொழிற்சாலைகளின் மூலம், ஆயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இது போல் பல்வேறு தொழில்கள் வருவதற்கு அதிமுக அரசு, அம்மா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

தமிழக அரசு ஒசூரில் சர்வதேச மலர் ஏல மையத்தை அமைத்துள்ளது, அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஜவஹர் நகர் பகுதியில் உள்ள மண்டு கருப்பசாமி, கௌமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் பேசிய ஓபிஎஸ், 2006 திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லிய அனைவருக்கும் 2ஏக்கர் நிலம் வழங்கப்பட வில்லை. தற்போதும் திமுக கொடுத்துள்ள தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத நோட்டு போன்று பொய்கள் நிறைந்ததாக இருக்கிறது. ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Must Read : மக்கள் நீதி மய்யம் பொன்ராஜ்க்கு கொரோனா தொற்று

 

செய்வதைத்தான் நாங்கள் சொல்வோம். செய்வதைத் தான் நாங்கள் சொல்வோம்.” என்று கூறினார்.
Published by:Suresh V
First published: