மனு பெட்டிகளை திமுக திறக்கப் போவதில்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

மனு பெட்டிகளை திமுக திறக்கப் போவதில்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

எடப்பாடி பழனிசாமி

30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையில் ஸ்டாலின் உள்ளார். பொட்டியில் போடத் தேவையில்லை. வீட்டில் இருந்தே குறைகளை தெரிவிக்கலாம்‌.

  • Share this:
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பேசி வீண் பழி சுமத்துவதாகக் கூறினார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், ‘இந்த தொகுதியில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது அதிமுக அரசு. 100 நாட்களில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாக சொல்கிறார். ஆனால் இவர்கள் ஆட்சியின்போது எதுவும் செய்யவில்லை. இதேபோல் முன்பு நடைபெற்ற தேர்தலின் போது பெட்ஷிட் போட்டு அமர்ந்து மனு வாங்கினார். ஆனால் செய்ய வில்லை. ஏனெனில் இவர்கள் ஆட்சியில் இல்லை.

    வாங்கும் மனுவை பெட்டியில் போட்டு பூட்டி வைத்து ஆட்சிக்கு வந்த பின்னர் நிறைவேற்றுவாரா? 100 நாட்களில் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவார். திட்டம் என்பது திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும். 100 நாட்களில் நிறைவேற்றுவேன் என மக்களை ஏமாற்றுகிறார்கள். பெட்டியில் போடும் மனுக்களை உடைக்க இவர்கள் ஆட்சிக்கு வரப்போவதுமில்லை. பெட்டிகளை உடைக்கப்போவதுமில்லை.

    10 நாட்களில் மக்கள் குறைகளை தீர்க்க செல்போன் வாயிலாக 1100 திட்டத்தை அறிவிக்க உள்ளோம். 30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையில் ஸ்டாலின் உள்ளார். பொட்டியில் போடத்தேவையில்லை. வீட்டில் இருந்தே குறைகளை தெரிவிக்கலாம்‌.

    வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசுதான். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பெறப்பட்ட பயிர் கண்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலினால் சொல்லத்தான் முடியும். சொன்னதை நிறைவேற்றும் அரசு அதிமுக அரசு.

    39 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுகவினர் தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டுவர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் 1 நாடாளுமன்ற உறுப்பினர் உள்ள அதிமுக 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டுவந்துள்ளோம்.

    உட்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால்தான் தொழிற்சாலை அமையும். வேலைவாய்ப்பு கிடைக்கும். அதனால் தான் உட்கட்டமைப்பு வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    திமுக ஆட்சிக்காலத்தில் கடுமையான மின்வெட்டு. ஆனால் அதிமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் மின்வெட்டு இல்லாத மின்மிகை மாநிலமாகி உள்ளது. 3 லட்சத்து 500 கோடியில் 304 புதிய தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    1086 கோடியில் குடிநீர் திட்டம். 686 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியம் மூலம் 5000 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனை தொடர்பாக நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வந்தவுடன் உடனடியாக இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்கும் பணி துவங்கும்.

    மேலும் படிக்க.... அடக்குமுறை சட்டங்களைக் கைவிடுங்கள்... பாஜக அரசு மக்களுக்காகப் போராடுபவர்களை கைது செய்கிறது - வைகோ

     

    ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு சான்று அதிமுக அரசு. மக்கள் என்ன எண்ணுகிறாராகளோ அதன் அடிப்படையில் செயல்படும் உங்கள் உத்தரவுக்கு செயல்படும் அரசு அம்மா அரசு ” என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published: