அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் நிலையில், சென்னையில் ஓ.பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலைக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சென்னை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், கடந்த மே.14ம் தேதி பாலமுருகன் உடல்நிலை மோசமடைந்து பெரியகுளத்தில் உயிரிழந்தார்.
தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, அதிமுக ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து, அக்கட்சி தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்துவது வழக்கம். எனினும், சமீப நாட்களாக, அவர்கள் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து, தனித்தனியே அறிக்கைகள் வெளியிட்டு வருவது அரசியல் வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி எழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் சமீபத்தில் மரணமடைந்ததையொட்டி, அவருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, அதிமுக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், உடன் இருந்தார்.
முன்னதாக, நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்
எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்களை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். மாவட்ட செயலாளர்களை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியது, அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, சென்னையில் ஓபிஎஸ் புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்த காரணத்தால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.