ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கருணாநிதி பேச்சை மேற்கோள் காட்டி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பதிலளித்த பழனிசாமி

கருணாநிதி பேச்சை மேற்கோள் காட்டி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பதிலளித்த பழனிசாமி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பதிலளித்த பழனிசாமி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பதிலளித்த பழனிசாமி

திமுக ஆட்சிக்காலத்தில் எத்தனை துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என்பதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஒரு சம்பவத்தின்போது துப்பாக்கிச்சூடு நடந்து அதில் உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கு காவல்துறை பொறுப்பல்ல என மறைந்த முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் பேசியதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டபஞ்சாயத்து கிடையாது, நிலஅபகரிப்பு கிடையாது, ரவுடிசம் இல்லை என குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், வெள்ளைக்காரர்கள் காலத்தில் மூட்டிக்கீழ் சூடுவார்கள், ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் ரவுடிகள் கத்தியால் கேக் வெட்டியதாகவும், தூத்துக்குடியில் காவல்துறையினர் வேன் மீது ஏறி நின்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவித்தார்.

Also Read : கோடநாட்டில் சிசிடிவி அகற்றப்பட்டது ஏன்? - மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்

அப்போது பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சிக்காலத்தில் எத்தனை துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என்பதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும், கடந்த 1969ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சட்டப்பேரவையில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு பற்றி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.

அப்போது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் செய்யும்போது Shoot to Kill என்ற முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. சுடுவதற்கு முன் கண்ணீர் புகை குண்டு, பின்பு தடியடி, பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள், அப்படி நடத்தப்படும் துப்பாக்கிச்சூட்டில் யாரும் உயிரிழந்தால் அதற்கு காவல்துறை பொறுப்பல்ல என்று கருணாநிதி பேசியதை நினைவுகூர்ந்தார்.

Also Read : விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடைவிதிக்கவில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதேபோல கடந்த 1998ம் சட்டப்பேரவையில் பேசியபோது, கலவரங்களை அடக்கும் சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு தடுக்க முடியாதது ஆகிவிடுகிறது என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவையில் பேசியதையும் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டினார். மேலும் காவல்துறை துப்பாக்கிச்சூடு என்பது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் எடுக்கக்கூடிய நடவடிக்கை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vijay R
First published:

Tags: Edappadi palanisamy, TN Assembly