முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடிபழனிசாமி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் தோல்வியடைந்ததால் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார்.

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி நேற்று தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக பல தொகுதிகளில் முன்னிலை பெற்றது. அதிமுக கூட்டணி 100 இடங்களை கூட வெற்றி பெறாத சூழல் உருவானது.

    தமிழகத்தில் திமுக கூட்டணி 159 இடங்களிலும் அதிமுக கூட்டணி 75 இடங்களையும் கைப்பற்றி உள்ளது. திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளதால் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார்.

    முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி உள்ளார். மேலும் முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளையும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    Also Read : திமுகவை 2 மாவட்டங்களில் வாஷ் அவுட் செய்த அதிமுக

    பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.
    Published by:Vijay R
    First published: