அத்திரவரதர் வைபவத்தில் அன்னதானத்திற்கு நிதி வழங்குக! முதல்வர் வேண்டுகோள்

ஆலோசனைக்குப் பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

அத்திரவரதர் வைபவத்தில் அன்னதானத்திற்கு நிதி வழங்குக! முதல்வர் வேண்டுகோள்
அத்திவரதர்
  • News18
  • Last Updated: July 24, 2019, 4:49 PM IST
  • Share this:
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலுக்கு அத்திவரதரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நிதி வழங்கும் திட்டத்தை ஒரு லட்ச ரூபாய் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை அக்கோயிலின் மூலவரான அத்திவரதர் எழுந்தருளும் வைபம் நடைபெறும். கடந்த ஜுலை 1-ம் தேதி தொடங்கி நடந்து வரும் இந்த வைபவ நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அத்திரவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துவருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். எனவே, அவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அறநிலையத்துறை அதிகாரிகள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

எடப்பாடி பழனிசாமி அவருடைய சொந்தப் பணத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்கி இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார். மேலும், அன்னதானம் வழங்கவிரும்புவோம், கீழ்கண்ட பெயருக்கு காசோலையாகவோ, வரைவோலையாகவோ பணம் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ARULMIGU DEVARAJA SWAMY TEMPLE, KANCHEEPURAM" என்ற முகவரிக்கு வரைவோலை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காசோலை மற்றும் வரைவோலையை,
செயல் அலுவலர்,
அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில்,
காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Also see:

First published: July 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading