நீட் தேர்வு நடத்துவது குறித்து கண் துடைப்பு நாடகமாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து திமுக செயல்படுத்தி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். தேர்தல் அறிக்கை வெளியிட்ட பெட்ரோல் டீசல் விலையை குறைக்க திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
கொரோனா பாதிப்பு உள்ள காலத்தில் வேலையிழந்து, கட்டுமான தொழிலாளர்கள் மிகுந்த சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர் எனவே திமுக அரசு கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. ஒவ்வொரு மையங்களிலும் எத்தனை தடுப்பூசிகள் உள்ளது என்பது குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் டோக்கன் வழங்கப்பட்டு அடுத்த நாள் பொதுமக்கள் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
Also Read : அறக்கட்டளை நிர்வாகிகளால் சிவசங்கர் பாபா உயிருக்கு ஆபத்து - பாபாவின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு
இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா அல்லது நடைபெறாது என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற அடிப்படையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவிப்பு வெளியிட்டனர். நீட் தேர்வு நடத்துவது குறித்து கண் துடைப்பு நாடகமாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து செயல்படுத்தி வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பொய்யான தேர்தல் அறிக்கை கொடுத்து தான் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2010ஆம் ஆண்டு, திமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Also Read : புதிய ரேஷன் கார்டு நாளை முதல் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது மின்வெட்டு இல்லாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை.
மின்வெட்டு குறித்து உரிய பதில் அளிக்க வில்லை. மாறாக அணில் ஐ காரணமாக கூறுவது வேடிக்கையானது. மக்கள் நம்ப மாட்டாட்கள். சிஐஜி அறிக்கை மறைக்கவில்லை. மின்சார வாரியத்தில் கூடுதல் விலைக்கு வாங்கியதால் தான் இழப்பு ஏற்பட்டது என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.