கோவையில் குளத்தை ஆய்வு செய்ய முயன்ற முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பை மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட கோதவாடி பஞ்சாயத்தில் உள்ள கோதவாடி குளம் 50 ஆண்டுகளாக புதர் மண்டி, குளம் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தது.
பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் முயற்சியின் காரணமாக கடந்த 2017-18ம் ஆண்டு குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், கோதவாடி குளம் தூர் வாருவதற்கு 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு குளம் மற்றும் வரத்து கால்வாய் தூர் வாரப்பட்டன.
இதனை நினைவு கூர்ந்த அக்கிராம மக்கள் நேற்று (டிசம்பர் 20) இரவு வருண பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக குளத்தின் கரையில் உள்ள அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிட உள்ளதாகவும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறும் பொள்ளாச்சி ஜெயராமனை அழைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜி சினிமா பாணியில் கார்களில் மாறி மாறிச் சென்று தப்பித்தார் - போலீசார் தகவல்
இதனை ஏற்று இன்று காலை கோதவாடி கிராமத்திற்கு பொள்ளாச்சி ஜெயராமன் சென்றுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக ஒன்றிய செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமனை முன்னிருத்தி பொங்கல் வைக்கக் கூடாது என்று கிராம மக்களை மிரட்டியுள்ளனர். இதனை பொருட்படுத்தாது நடைபெற்ற நிகழ்ச்சியில் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றபோது திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் 40 அடியாட்களுடன் வந்து அவர் மீதும், மக்கள் மீதும் கொலைவேறி தாக்குதல் நடத்தியதோடு, பொங்கல் வைத்து வழிபட்ட பெண்களையும் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர்.
பொள்ளாச்சி ஜெயராமன் போன்றோரே பட்டப் பகலில் காவல் துறையினர் முன்னிலையில் திமுக குண்டர்களால் தாக்கப்படுகிறார் என்றால் சாதாரண, சாமான்ய மக்களின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. விடியா அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே திமுகவினரால் மக்கள், அதிகாரிகள் தாக்குதலுக்குட்பட்டு வருகின்றனர். கொலை, கொள்ளை நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது.
மேலும் படிங்க: தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கிருமி நாசினி பீய்ச்சி அடித்து மனித உரிமை மீறல்
இதுபோன்ற சட்டவிரோத செயல்களைத் தடுத்து நிறுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை அதிமுக முன்னெடுக்கும். காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தவறு செய்த திமுகவினர் மீதும் வேடிக்கை பார்த்த காவல் துணை கண்காணிப்பாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.