Home /News /tamil-nadu /

குற்றவாளிகளுக்கு ஆதரவான அரசு திமுக - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

குற்றவாளிகளுக்கு ஆதரவான அரசு திமுக - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

குற்றவாளிகளுக்கு ஆதரவான அரசு தான் திமுக அரசு, மக்களுக்கு பாதுகாப்பான அரசில்லை என சட்டப்பேரவையில் வெளிநடப்புக்கு பின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி   தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவதாத கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது தமிழக அரசு தேவையற்ற பொய் வழக்குகளை போட முயற்சிப்பதாக கோரி அமளியில் ஈடுபட்டு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் கொடநாடு இல்லத்தில் அவ்வோப்போது சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அவரது மறைவிற்கு பின் சில கொள்ளை கும்பல் கொள்ளையடித்துள்ளது. அது யாரென்பது அனைவருக்கும் தெரியும்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை முடியும் தருவாயில் உள்ளதோடு அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு  வரும் 28ம் தேதி விசாரணைக்கும் வர உள்ளது. இந்த நிலையில் எங்களை அச்சுறுத்த திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

Also Read :  ரோஸ் என்றும் மல்லிகை ஆகாது - ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு அமைச்சர் பிடிஆர் விளக்கம்

திமுக அரசு திட்டமிட்டே என் மீதும் முன்னாள் அமைச்சர் மீதும் அவதூறு பரப்பும் வகையில் பொய் வழக்கு பதிவு செய்கிறார்கள், இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். திமுக தேர்தலில் போது 505க்கும்  மேறப்பட்ட அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில் அதனை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பு இந்த பொய் வழக்கு முயற்சியை கையிலெடுத்துள்ளதாக கூறிய திமுக அரசின் இப்போக்கிற்கு வன்மையான கண்டனம் தெரிவித்தார்.

எங்களை முடக்க நினைப்பது எப்போதும் நடக்காது என்ற அவர் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் நேரமில்லா நேரத்தில் நான் என்னுடைய பிரச்சனையை பேச முற்பட்டதாகவும்சட்டமன்ற உறுப்பினர்  பிரச்சனையை எழுப்ப  உரிமை உண்டு.

Also Read : மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டேன் - நித்யானந்தா மீண்டும் சர்ச்சை

சயன், மனோஜ், பாலைய ரவி இவர்கள் மூவரும் பேசிய வீடியோ முன்பே சாணக்ய யூடியூப் சேனலில் வந்துள்ளதாகவும் அப்போதிலிருந்து பொய் வழக்கு போடும் முயற்சி நடந்து வந்துள்ளதாக கூறிய அவர் எங்களை போன்றவர்களுக்கே இந்த நிலைமை சாதரண மக்களுக்கு எப்படி பாதுக்கப்பு இருக்கும், தமிழக மக்களுக்கான பாதுகாப்பை  இந்த அரசிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. எங்களை முடக்க நினைப்பது எப்போதும் நடக்காது என்ற அவர் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் நேரமில்லா நேரத்தில் நான் என்னுடைய பிரச்சனையை பேச முற்பட்டதாகவும்சட்டமன்ற உறுப்பினர்  பிரச்சனையை எழுப்ப  உரிமை உண்டு என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published:

Tags: ADMK, EPS, TN Assembly

அடுத்த செய்தி