Home /News /tamil-nadu /

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டம்.. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த ஈபிஎஸ்

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டம்.. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த ஈபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Online Gambling: ஆன்லைன் சூதாட்டம் மூலம் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சூதாட்ட தடை சட்டத்தை உடனடியாக ஏற்ற வேண்டும் -எடப்பாடி பழனிசாமி

    ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் ரகுபதி பேரவையில் தெரிவித்தார்.

    ஆன்லைன் சூதாட்டம் குறித்து எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக அவசர சட்டம் பிறப்பித்து தடை செய்யப்பட்டது.ஆன்லைன் நிறுவனங்கள் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மூத்த வழக்கறிஞரை கொண்டு வாதாடின. இந்த வழக்கு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. 03.08.2021 அன்று வழக்கு நடைபெற்றது. இதில் அதிமுக அரசு இயற்றப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டது.

    Also Read:  எல்லா பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்றால் போக்குவரத்து கழகத்தை எப்படி நடத்துவது? - அமைச்சர் ராஜ கண்ணப்பன்

    சட்டத்துறை அமைச்சர் சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 100 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஆன்லைன் சூதாட்டம் மூலம் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.மூத்த சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை உடனடியாக ஏற்ற வேண்டும் என தெரிவித்தார்.

    Also Read: இரிடியம் மோசடி கும்பலிடம் கோடிகளை இழந்த நடிகர் விக்னேஷ்..!

    இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் முதல்வருக்கு மாற்று கருத்து இல்லை. இந்த சட்டம் அதிமுக ஆட்சியில் அவசரமாக கொண்டு வரப்பட்டது. எதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என்ற குறிப்புகள் முறையாக இல்லாததால்தான் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

    அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை நிலைநிறுத்தவே உச்சநீதிமன்றம் சென்றுள்ளோம். நடைமுறையில் இருக்கும் சட்டங்களை கொண்டு திமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை காப்பாற்றும் பணியை செய்து கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம் என தெரிவித்தார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, Edappadi palanisamy, Game, Online Frauds, Online rummy, TN Assembly

    அடுத்த செய்தி