மதுரையில் ஜல்லிக்கட்டு காளைக்கு சிலை: பிரசாரத்தில் முதலமைச்சர் உறுதி!

ஜல்லிக்கட்டுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் பழனிசாமி, ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற சிலை அலங்காநல்லூரில் விரைவில் நிறுவப்படும் என்றும் உறுதியளித்தார்.

Web Desk | news18
Updated: April 6, 2019, 1:28 PM IST
மதுரையில் ஜல்லிக்கட்டு காளைக்கு சிலை: பிரசாரத்தில் முதலமைச்சர் உறுதி!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Web Desk | news18
Updated: April 6, 2019, 1:28 PM IST
ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற சிலை அலங்காநல்லூரில் நிறுவப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து அலங்காநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார். அப்போது வேட்பாளர் பெயரின் மூன்று முறை தவறாகக்கூறிய முதலமைச்சர் பழனிசாமி, பிறகு குறிப்பு அட்டையில் இருந்த பெயரை பார்த்து வாசித்தார்.

தொடர்ந்து பரப்புரை செய்த முதலமைச்சர் பழனிசாமி, நாட்டில் வசிக்கும் 103 கோடி பேருக்கு பாதுகாப்பு அரணாக பிரதமர் மோடி இருப்பதாக குறிப்பிட்டார்.


அலங்காநல்லூரில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும்  உறுதியளித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் இரண்டு ஏக்கர் நிலங்கள் தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

மேலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாகவும் ஏரிகள், குளங்கள், ஆறுகளுக்கு குறுக்கே தடுப்பணைகள் கட்டி உபரிநீர் சேமிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜல்லிக்கட்டுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் பழனிசாமி, ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற சிலை அலங்காநல்லூரில் விரைவில் நிறுவப்படும் என்றும் உறுதியளித்தார்.

Loading...

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...