தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது! பொன்.ராதாகிருஷ்ணன் கருத்தை மறுக்கும் முதல்வர்

தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது! பொன்.ராதாகிருஷ்ணன் கருத்தை மறுக்கும் முதல்வர்
எடப்பாடி பழனிசாமி
  • Share this:
சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் அமைதி பூங்காவாகத் திகழ்ந்து வருகிறது, அதை சிலர் சீர் குலைக்க முயல்கிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக, அமைதியாக நடைபெற்றது. எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அரசு அதிகாரிகள் நடுநிலையாக செயல்பட்டார்கள். வேண்டுமென்றே மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் மரணம் தொடர்பாக விசாரனை நடைபெற்று வருகிறது. அறிக்கை கிடைத்தவுடன் விபரம் தெரியவரும். மத்திய அரசின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள். அச்சபடத் தேவையில்லை. தேவையற்று பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். இதுகுறித்து சட்டமன்றத்தில் கூட தெளிவுபடுத்தியுள்ளோம்.


கட்சித் தொண்டர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காகவும் , அவர்களை உற்சாகப்படுத்தவே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அவர்களது கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். அன்புமணியும் அவ்வாறே பேசி வருகிறார். அவர் தனது கட்சி கூட்டத்தில் தவறகாக எதுவும் பேசவில்லை.

மக்கள் தான் எஐமானர்கள் சிறப்பாக ஆட்சி நடக்கிறது. அதனால் அனைத்து துறைகளிலும் தமிழக அரசு தேசிய விருது பெற்று வருகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. அதை சிலர் சீர் குலைக்க முயல்கின்றனர்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading