எடப்பாடி பழனிசாமியும் மு.க.ஸ்டாலினும் ஒரேநாளில் கோவையில் பிரச்சாரம்

எடப்பாடி பழனிசாமியும் மு.க.ஸ்டாலினும் ஒரேநாளில் கோவையில் பிரச்சாரம்

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

நாளை ஒரே நாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கோவையில் பிரசாரம் செய்ய உள்ளனர். இதனால் அங்கே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 • Share this:
  நாளை ஒரே நாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கோவையில் பிரசாரம் செய்ய உள்ளனர். இதனால் அங்கே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  அந்த வகையில், நாளை ஒரே நாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கோவையில் பிரசாரம் செய்கின்றனர். எடப்பாடி பழனிசாமி நாளை காலை நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். காலை 10.15 மணிக்கு கூடலூரிலும், 11.40 மணிக்கு குன்னூரிலும் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

  அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து கோவை வரும் முதலமைச்சர் பிற்பகல் 3 மணிக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசவுள்ளார். அதனை தொடர்ந்து ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

  இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 8 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் கூட்டத்தில் மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

  அதனைத் தொடர்ந்து, காலை 10 மணியளவில் கவுண்டம்பாளையத்தில் கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

  அதனைத் தொடர்ந்து சென்னை திரும்பும் ஸ்டாலின் நாளை மாலை கொளத்தூர் தொகுதியிலும், பின்னர் மைலாப்பூர், தியாகராய நகர், ஆயிரம் விளக்கு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

  Must Read : 130 கோடி மக்கள் சார்பாக தமிழ் மண்ணிற்கு நன்றி : கோவையில் யோகி ஆதித்யநாத் பேச்சு

   

  ஏப்ரல் 4 ஆம் தேதியுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. இறுதிநாளான அன்று, கூடுதலாக 2 மணி நேரம் அதாவது இரவு 7 மணிவரை பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: