Home /News /tamil-nadu /

எங்களால் முடிந்த போது, உங்களால் ஏன் முடியவில்லை? சட்டப்பேரவையில் பிடிஆர், இபிஎஸ் காரசார விவாதம்

எங்களால் முடிந்த போது, உங்களால் ஏன் முடியவில்லை? சட்டப்பேரவையில் பிடிஆர், இபிஎஸ் காரசார விவாதம்

பிடிஆர் - இபிஎஸ்

பிடிஆர் - இபிஎஸ்

Tamil Nadu Assembly | தமிழக சட்டப்பேரவையில் நிதி பற்றாக்குறை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையயே காரசார விவாதம் நடைபெற்றது.

    கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் அதிகமாக இருந்த காலத்தில் எங்களால் ஒராண்டில் பத்தாயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை குறைக்க முடிந்த போது, உங்களால் ஏன் செய்ய முடியவில்லை என எடப்பாடி பழனிச்சாமியிடம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.

    தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் பொதுவிவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் தனபால், நிதிநிலை அறிக்கையில் புதிதாக வருவாயை உயர்த்த திட்டம் ஏதும் இல்லை. செலவினத்தை குறைக்கவும் திட்டங்கள் ஏதுமில்லை. சீர்திருத்தம் செய்ததாக தெரியவில்லை எனக்கூறினார்.

    இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின் வருவாய் பற்றாக்குறை 92 ஆயிரம் கோடி வரை செல்லும் என கணிக்கப்பட்டது. ஆனால், முதலமைச்சரின் ஒருங்கிணைந்த சீரிய நடவடிக்கைகளால் 82 ஆயிரம் கோடியாக, சுமார் 10 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளோம், என்றார்.

    Also Read : ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பிரச்னை குறித்து விளக்கம் கொடுத்த உணவுத்துறை அமைச்சர்

    சரியான நிதி திட்டமிடுதலால் கடந்த காலத்தைவிட சுமார் 10 ஆயிரம் கோடியை குறைந்துள்ளோம். முன்னாள் சபாநாயகர் தனபால் அறிக்கையை படித்தால் அவருக்கு தெரியும். நடப்பாண்டில் நிதி பற்றாக்குறை மேலும் படிப்படியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஏழு நிதிநிலை அறிக்கைகளில், எந்த நெருக்கடிகளும் இல்லாத காலத்திலும் இதுபோல வருவாய் ப்பற்றாக்குறை அளவு குறைந்ததில்லை. ஆனால் ஒரே வருடத்திற்குள் வருவாய் பற்றாக்குறை தொகையை குறைத்துள்ளோம் என பதிலளித்தார்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா முதல் அலையின் போது பல கட்டுப்பாடுகள் இருந்தன. தொடர்ந்து தளர்வுகள் கொடுக்கப்பட்ட பின் 20 ஆயிரம் கோடி வருவாய் அதிகமாக வந்தது, எனக் குறிப்பிட்டார்.

    அப்போது மீண்டும் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வருவாய் அதிகமாக வந்தது உண்மைதான். கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கியது, நிவாரண செலவுகள், நிர்வாக செலவுகள் அதிகரித்தது, பேரிடர் கால செலவுகள் என பல நெருக்கடிகள் இருந்தபோதும் எங்களால் வருவாய் பற்றாக்குறையை 10 ஆயிரம் கோடி அளவில் குறைக்க முடிந்த போது, எந்த பிரச்னையும் இல்லாத உங்கள் ஆட்சியில் ஏன் வருவாய் பற்றாக்குறையை குறைக்க இயலவில்லை எனக் கேள்வி எழுப்பினார்
    Published by:Vijay R
    First published:

    Tags: Edappadi palanisamy, Minister Palanivel Thiagarajan, TN Assembly

    அடுத்த செய்தி